For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆத்தாடி.. புஜாரா காலி.. வந்தவுடன் டெரர் காட்டிய மலை மனிதன்.. 100 ஆண்டு சாதனையை உடைத்தார்!

கிங்க்ஸ்டன் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெ.இண்டீஸ் அணிக்காக அறிமுகமான ரகீம் கார்ன்வால் மீது தான் அனைவரின் கண்ணும் இருந்தது.

6 அடி 5 அங்குலம் உயரம், 140 கிலோவுக்கு மேல் எடை கொண்ட வீரர் என்றால் வியப்பை ஏற்படுத்தாமல் இருக்க முடியுமா?

ஆஃப் ஸ்பின்னர் ஆன ரகீம் கார்ன்வால் தன் முதல் டெஸ்டிலேயே சுமார் நூறாண்டு கால சாதனை ஒன்றை முறியடித்தார். அதுவும் அவரது எடையை வைத்து என்பது தான் சுவாரசியம்.

வெ.இண்டீஸ் அறிமுக வீரர்கள்

வெ.இண்டீஸ் அறிமுக வீரர்கள்

இரண்டாவது டெஸ்டில் வென்றால் மட்டுமே இந்தத் தொடரை சமன் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது வெஸ்ட் இண்டீஸ். இந்த நிலையில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்து வீச முடிவு செய்தார். அணியில் இரு வீரர்களை அறிமுகம் செய்தார் ஜேசன் ஹோல்டர்.

ரகீம் கார்ன்வால் சாதனை

ரகீம் கார்ன்வால் சாதனை

அந்த இரு வீரர்கள் ரகீம் கார்ன்வால் மற்றும் ஜஹ்மர் ஹாமில்டன் ஆகிய இரு அறிமுக வீரர்களை பெயரிட்டன. 140 கிலோ எடையுள்ள ரகீம் கார்ன்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் மிகப்பெரிய வீரர் என்ற சாதனையை செய்தார்.

முந்தைய சாதனை

முந்தைய சாதனை

133 முதல் 139 கிலோ எடை கொண்ட ஆஸ்திரேலியாவின் வார்விக் ஆம்ஸ்ட்ராங் வைத்திருந்த முந்தைய சாதனையை கார்ன்வால் முறியடித்தார். ஆம்ஸ்ட்ராங் 1902 மற்றும் 1921க்கு இடையில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

எப்படி அணியில் இடம் பெற்றார்?

எப்படி அணியில் இடம் பெற்றார்?

இத்தனை பெரிய எடை கொண்ட வீரராக இருக்கிறாரே? இவர் எப்படி கிரிக்கெட் ஆட முடியும்? என்று சிலர் கேட்கலாம். ஆனால், கார்ன்வால் திறமையான சுழற் பந்துவீச்சாளர் ஆவார். 55 முதல் தர போட்டிகளில் பந்துவீச்சு சராசரியாக 23.9 வைத்துள்ளார். 260 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.

பேட்டிங்கும் சூப்பர்

பேட்டிங்கும் சூப்பர்

மேலும், கார்ன்வால் ஒரு திறமையான கீழ் வரிசை பேட்ஸ்மேன் ஆவார். அவரது உயரமான, பெரிய உருவத்தால், அவர் பந்தை லேசாக தட்டினாலே போதும் என்று அவரைப் பற்றி கூறுகிறார்கள்.

இந்திய அணிக்கு பயம் காட்டினார்

இந்திய அணிக்கு பயம் காட்டினார்

2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது கார்ன்வால் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியில் ஆடினார். அப்போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாரா என பெரிய விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தியா ஏ போட்டி

இந்தியா ஏ போட்டி

கடந்த வாரங்களில் நடைபெற்ற இந்தியா ஏ - வெ.இண்டீஸ் ஏ போட்டியில் ரகீம் கார்ன்வால் 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டு அரைசதங்களையும் அடித்தார். அது தான் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் பெற்றுக் கொடுத்தது.

உருவமே பலம்

உருவமே பலம்

பலரும் பருமனான உடல் எடை மற்றும் பெரிய உயரத்தை வைத்துக் கொண்டு கிரிக்கெட் ஆடுவது கடினம் என நினைத்தால், அதையே தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளார் கார்ன்வால். அவரது உயரம் காரணமாக பந்தை அதிகமாக பவுன்ஸ் செய்து சுழல வைக்கும் திறன் பெற்றுள்ளார் கார்ன்வால்.

இரண்டாம் டெஸ்டிலும் கலக்கல்

இரண்டாம் டெஸ்டிலும் கலக்கல்

இரண்டாவது டெஸ்டில் கார்ன்வால் அசத்தினார். டெஸ்ட் மன்னன் புஜாராவின் பெரிய விக்கெட்டை வீழ்த்தினார். அது மட்டுமின்றி, ஸ்லிப் பீல்டிங்கில் அசத்தலாக செயல்பட்டு இந்தியாவின் துவக்க வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் ராகுல் கொடுத்த இரண்டு கேட்சுகளை பிடித்தார்.

கார்ன்வால் பந்துவீச்சு

கார்ன்வால் பந்துவீச்சு

இரண்டாவது டெஸ்டில் ரகீம் கார்ன்வால் 8 மெய்டன் ஓவர்கள் உட்பட 27 ஓவர்கள் வீசினார். 69 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மேலும், முதல் நாளில் அதிக ஓவர்கள் வீசியவரும் இவர் தான்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இரண்டாவது டெஸ்டில் இந்தியா முதல் நாளின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 76, மாயங்க் அகர்வால் 55 ரன்கள் சேர்த்தனர். விஹாரி, பண்ட் பேட்டிங் செய்து வருகின்றனர்.

Story first published: Saturday, August 31, 2019, 10:49 [IST]
Other articles published on Aug 31, 2019
English summary
IND vs WI 2019 : Rahkeem Cornwall breaks heaviest test cricketer record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X