For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த தம்பிக்கு இனி கண்டம் தான்.. 2 மேட்ச்சுக்கு அப்புறம் செம ஆப்பு இருக்கு!

Recommended Video

Pant under pressure | பண்ட்டுக்கு 2 ஆட்டம் தான்! காரணம் என்ன?

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் மிகவும் மோசமான பார்மில் இருப்பதால், கடும் சிக்கலில் இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி முற்றிலுமாக கைப்பற்றியது, இரண்டு தொடரிலும் இந்திய அணி ஒரு தோல்வி கூட பெறவில்லை.

ஆனால், இளம் வீரர் ரிஷப் பண்ட் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மிக மோசமாக செயல்பட்டார்.

அரைசதம்

அரைசதம்

பேட்டிங் ஆட ஐந்து போட்டிகளில் வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் அதில் ஒரு போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். அப்புறம் என்ன? என்று கேட்கலாம். ஆனால், மற்ற போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் மிகவும் சொற்பம்.

மோசமான ஷாட்

மோசமான ஷாட்

அணிக்கு தேவையான நேரங்களில் மோசமான ஷாட் ஆடி அவுட் ஆவதை வழக்கமாக வைத்துள்ளார் ரிஷப் பண்ட். உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு பெற்ற அவர், அந்த போட்டிகளில் பெரிதாக ரன் எடுக்காவிட்டாலும், 30. 40 ரன்கள் எடுத்து மிடில் ஆர்டரில் ரன் குவிக்க உதவியாக இருந்தார்.

எடுத்த ரன்கள்

எடுத்த ரன்கள்

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு பெற்றார். இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் 20, 0. அதற்கு முன் டி20 தொடரில் அவர் எடுத்த ரன்கள் 0, 4, 65*.

டெஸ்ட் போட்டிகள்

டெஸ்ட் போட்டிகள்

ஒரே ஒரு அரைசதம் அடித்து விட்டு, மற்ற போட்டிகளில் இப்படி மோசமாக ஆடி வருவதால் ரிஷப் பண்ட் நிலை மோசமாக உள்ளது. குறிப்பாக குறைந்த ஓவர் போட்டிகளை காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் இடம் உறுதி என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கும் இப்போது சிக்கல் எழுந்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இனி வரும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கம் என்பதால் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி வலுவான அணியுடன் களமிறங்கி வெற்றி பெற வேண்டும். பரிசோதனை முயற்சிகள் எடுக்க வாய்ப்பே இல்லை.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

அதனால், ரிஷப் பண்ட் பார்ம் அவுட் எனத் தெரிந்தால் அவரை டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்படும். வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான பயற்சிப் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் தான் ரிஷப் பண்ட்டுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும்.

இரண்டு வீரர்கள்

இரண்டு வீரர்கள்

இந்த வாய்ப்பிலும் அவர் சொதப்பும் பட்சத்தில் விரிதிமான் சாஹா அல்லது ஸ்ரீகர் பிரசாத் ஆகிய இருவரில் ஒருவர் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பர். சாஹா ரிஷப் பண்ட்டுக்கு முன்பு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தார்.

ஆப்பு

ஆப்பு

ஸ்ரீகர் பிரசாத் உள்ளூர் போட்டிகளிலும், இந்தியா ஏ அணிக்காக ஆடிய போட்டிகளிலும் ரன் மழை பொழிந்துள்ளார். இவர்கள் இருவரும் தான் ரிஷப் பண்ட்டுக்கு ஆப்பு வைக்கப் போகிறார்கள். இனி வரும் வாய்ப்புகளை பண்ட் கோட்டை விடாமல் கவனமாக ஆட வேண்டும்.

Story first published: Saturday, August 17, 2019, 15:45 [IST]
Other articles published on Aug 17, 2019
English summary
IND vs WI 2019 : Rishabh Pant place in test squad under pressure
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X