For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த நம்பரை கவனிச்சீங்களா? போட்டோவுக்கு முதுகை காட்டிக் கொண்டு போஸ் கொடுத்த ரோஹித் - கிறிஸ் கெயில்!

Recommended Video

IND VS WI 1ST ODI | ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் கொடுப்பார்களா

பிராவிடன்ஸ் : தனக்கும், கிறிஸ் கெயிளுக்கும் இடையே இருக்கும் அதிகம் கவனிக்கப்படாத ஒற்றுமை ஒன்றை சுட்டிக் காட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மா - கிறிஸ் கெயில் இடையே உள்ள ஒற்றுமை என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருவது இருவரும் அடித்துத் தள்ளி இருக்கும் சிக்ஸர்கள் தான்.

ஆனால், வேறு ஒரு ஒற்றுமையும் உள்ளது. அதை புகைப்படம் எடுத்து காட்டி உள்ளார் ரோஹித் சர்மா.

என்ன பாவம் பண்ணாரு? டி20யிலும் பெப்பே தான்.. ஒருநாள் அணியில் இடம் கொடுப்பீங்களா.. மாட்டீங்களா? என்ன பாவம் பண்ணாரு? டி20யிலும் பெப்பே தான்.. ஒருநாள் அணியில் இடம் கொடுப்பீங்களா.. மாட்டீங்களா?

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. முன்னதாக நடந்த டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 3 - 0 என இந்திய அணி கைப்பற்றியது. அதனால், ஒருநாள் தொடரை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் திட்டமிடும்.

மீண்டும் கிறிஸ் கெயில்

மீண்டும் கிறிஸ் கெயில்

வெஸ்ட் இண்டீஸ் அணி டி20யில் பலவீனமாக இருந்தாலும், ஒருநாள் அணியில் கிறிஸ் கெயில் போன்ற மூத்த வீரர்களுடன் களம் காண்கிறது. கிறிஸ் கெயில் உலகக்கோப்பை தொடரில் பெரிதாக செயல்படவில்லை என்றாலும், இந்த தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளார். அனேகமாக, அவருக்கு இதுவே கடைசி ஒருநாள் தொடராக இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த ஒற்றுமை

இந்த நிலையில், கிறிஸ் கெயிலுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ரோஹித் சர்மா. அந்த புகைப்படத்தில் இருவரும் தங்கள் தேசிய அணியின் ஆடையை அணிந்து, முதுகை காட்டிக் கொண்டு நிற்கின்றனர். அதன் மூலம், அவர்கள் இருவரின் ஜெர்சி எண்ணும் 45 என சுட்டிக் காட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா.

சிக்ஸர் கில்லாடிகள்

சிக்ஸர் கில்லாடிகள்

இருவருமே சிக்ஸர் கில்லாடிகள் என்பதோடு துவக்க வீரர்களாகவும் இருக்கின்றனர். அதோடு அவர்கள் ஜெர்சி எண்ணும் ஒன்று தான் என்பது பலருக்கும் வியப்பான தகவல் தான். இதுவரை சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் கிறிஸ் கெயில் 529 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

முந்தும் வாய்ப்பு

முந்தும் வாய்ப்பு

தற்போது ஆடி வரும் வீரர்களில் கிறிஸ் கெயில் சிக்ஸ் சாதனையை முறியடிக்கக் கூடிய ஒரே வாய்ப்பு ரோஹித் சர்மாவுக்கு மட்டுமே உள்ளது. ரோஹித் 371 சிக்ஸர்களுடன் நான்காம் இடத்தில் இருக்கிறார்.

கெயிலை முந்தினார்

கெயிலை முந்தினார்

சமீபத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும் கிறிஸ் கெயில் அடித்து இருந்த 105 சிக்ஸர்கள் என்ற சாதனையை முந்தி 107 சிக்ஸர்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார் ரோஹித் சர்மா. இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20யில் செய்தார்.

இரட்டை சதம்

இரட்டை சதம்

இருவருமே ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா மூன்று முறையும், கிறிஸ் கெயில் ஒரு முறையும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

சிக்ஸ் மழை பொழிவார்களா?

சிக்ஸ் மழை பொழிவார்களா?

தற்போது நடக்க உள்ள ஒருநாள் தொடரில் கிறிஸ் கெயில் - ரோஹித் சர்மா சிக்ஸ் மழை பொழிவார்களா? இரட்டை சதம் அடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, August 8, 2019, 14:43 [IST]
Other articles published on Aug 8, 2019
English summary
IND vs WI 2019 : Rohit Sharma - Chris Gayle share common Jersey number
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X