For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேலைக்கு ஆப்பு.. தூதரகத்தில் வாயை கொடுத்து வம்பில் சிக்கிய இந்திய அணி மானேஜர்.. கடுப்பான டெல்லி!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : இந்திய கிரிக்கெட் அணி மேலாளர் சுனில் சுப்ரமணியத்திற்கு இனி பணி நீட்டிப்பு கிடைக்காது என்றும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாதியில் இருந்தே நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

சுனில் சுப்பிரமணியம் தூதரக அதிகாரியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதோடு, மத்திய அரசால் கொடுக்கப்பட்ட ஒரு வேலையை செய்ய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதனால், இன்னும் சில தினங்களில் நடக்க உள்ள இந்திய அணிக்கான பயிற்சியாளர்கள் மற்றும் இதர பணியாட்கள் தேர்வில் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது.

இந்தியா - வெ.இண்டீஸ் தொடர்

இந்தியா - வெ.இண்டீஸ் தொடர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 3 வரை இந்த கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

45 நாள் நீட்டிப்பு

45 நாள் நீட்டிப்பு

இந்த தொடருக்கு முன்னர் உலகக்கோப்பையுடன் இந்திய அணி பயிற்சியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களின் பதவிக் காலம் முடிந்தது. எனினும், அடுத்த கட்ட தேர்வு நடைபெற கால அவகாசம் வேண்டும் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை மேலாளர் சுனில் சுப்பிரமணியம் உட்பட அனைவரும் பணியில் இருக்கும் வகையில் 45 நாட்கள் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது.

யார் இவர்?

யார் இவர்?

சுனில் சுப்பிரமணியம் தமிழகத்தை சேர்ந்தவர். தமிழக கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஆவார். ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முன்பு பயிற்சி அளித்துள்ளார் என்றும், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஆதரவு பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

விளம்பரம் எடுக்க திட்டம்

விளம்பரம் எடுக்க திட்டம்

இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, கோலியை வைத்து "நீர் சேமிப்பு" குறித்த விளம்பரம் எடுக்க இந்திய அரசு உத்தரவு பிறப்பித்து, வெஸ்ட் இண்டீஸ்-இல் இருக்கும் இந்திய ஹை-கமிஷனுக்கு அது குறித்த தகவல்களை அனுப்பி உள்ளது.

தொடர்பு கொண்டார்

தொடர்பு கொண்டார்

அது பற்றி பிசிசிஐக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ்-இல் இருக்கும் இந்திய ஹை-கமிஷனை சேர்ந்த அதிகாரி விளம்பரம் எடுப்பது குறித்து இந்திய அணி மேலாளர் சுனில் சுப்ரமணியத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

அதற்கு பதில் அளித்த சுனில் சுப்ரமணியம், "என்னை மெசேஜ் வெள்ளத்தில் மூழ்கடிக்காதீர்கள்" என எரிச்சலில் பேசியதாக கூறப்படுகிறது. அதைக் கேட்டு அதிர்ந்து போன அந்த அதிகாரி, அந்த தகவலை மேலிடத்தில் கூற, விஷயம் டெல்லி வரை சென்றுள்ளது.

டெல்லி என்ன சொன்னது?

டெல்லி என்ன சொன்னது?

பிசிசிஐக்கு வந்த வாய் மொழி உத்தரவின் படி சுனில் சுப்ரமணியத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. அவரது பதவிக் காலம் நீட்டிப்பில் இருக்கும் நிலையில் அவரை பணி நீக்கம் செய்வதிலும் எந்த சிரமமும் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரின் பாதியில் இருந்தே அவர் நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

வேலை காலி

வேலை காலி

ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவியில் அமர்வார் என கூறப்படும் நிலையில், அவருக்கு வேண்டிய சுனில் சுப்ரமணியம் நிச்சயம் பணியை தக்க வைத்துக் கொள்வார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது வாயை கொடுத்து வம்பில் சிக்கி பெரிய வாய்ப்பை இழந்துள்ளார்.

Story first published: Wednesday, August 14, 2019, 11:38 [IST]
Other articles published on Aug 14, 2019
English summary
IND vs WI 2019 : Sunil Subramaniam, Team India manager, job under severe threat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X