For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரன் அவுட்டில் சிக்கிய ராகுல்..! சூரியகுமாரை களத்தில் திட்டி வெளியேற்றம்..!! யார் மீது தவறு?

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Recommended Video

IND vs WI: I'm Ready To Bat Wherever Team Requires, Been Bowling in Nets As Well- S.Yadav

டாஸ் வென்று முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ரோகித் சர்மாவும், ரிஷப் பண்டும் களமிறங்கினர்.

“3 திறமைகள் ஒரே வீரருக்குள்” மெகா ஏலத்தில் வரலாறு படைக்கும் இளம் வீரர்.. அடித்துக்கூறும் அஸ்வின்! “3 திறமைகள் ஒரே வீரருக்குள்” மெகா ஏலத்தில் வரலாறு படைக்கும் இளம் வீரர்.. அடித்துக்கூறும் அஸ்வின்!

கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் 18 ரன்களில் தேவையில்லாத ஷாட் ஆடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்

சூரியா-ராகுல்

சூரியா-ராகுல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 18 ரன்களில் வெளியேற, இந்திய அணி 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ், கே.எல்.ராகுல் ஜோடி நடுக்கடலில் தத்தளித்த கப்பலை போல் தத்தளித்த இந்திய அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

89 ரன்கள்

89 ரன்கள்

இருவரும் நிதானமாக விளையாடி சிங்கள்ஸ், அவ்வப்போது பவுண்டரி என அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல நகர்த்தினர். இந்த ஜோடி ஒரு அளவுக்கு செட்டாகி அதிரடியை காட்டலாம் என்று நினைத்த போது தான் ரன் அவுட்டில் சிக்கி பிரிந்தது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது.

ரன் அவுட்

ரன் அவுட்

ஆட்டத்தின் 30வது ஓவரில் ராகுல் அடித்த பந்தை எல்லைகோட்டுக்கு அருகில் தடுத்த, ஹூசைன் பந்தை தூக்கி விக்கெட் கீப்பரை நோக்கி எறிந்தார். இந்த நேரத்தில் எளிதாக 2 ரன்கள் ஓடி இருக்கலாம். ஆனால், ராகுல் 2வது ரன் ஓடும் போது திடீரென்று பாதியில் பிரேக் போட்டு நின்று, மீண்டும் ஓடுவதற்குள் ரன் அவுட் ஆகிவிட்டார்.

யார் மீது தவறு

யார் மீது தவறு

தவறு முழுவதும் ராகுல் மீது தான் இருந்தது. ஆனால் தேவையில்லாமல் சூரியகுமார் யாதவை ஏதோ திட்டிவிட்டு முறைத்து கொண்டே பெவிலியன் நோக்கி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சூரியகுமார் யாதவ் நம் மீது என்ன டா தப்பு இருக்கு என்று முழித்தார். இவ்வாறு செய்யும் போது, நன்றாக விளையாடும் வீரருக்கும் கவனம் சிதறும். ஆனால் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சூரியா மீது பழி சுமத்திவிட்டு 49 ரன்களில் நடையை கட்டினார்.

Story first published: Wednesday, February 9, 2022, 18:12 [IST]
Other articles published on Feb 9, 2022
English summary
Ind vs WI 2nd odi KL Rahul got run out and blames suryakumar yadav ரன் அவுட்டில் சிக்கிய ராகுல்..! சூரியகுமாரை களத்தில் திட்டி வெளியேற்றம்..!! யார் மீது தவறு?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X