இந்திய அணியில் 2 வீரர்களுக்கு காயம்.. தமிழக வீரருக்கு அடித்த லக்.. பிளேயிங் லெவனில் திடீர் மாற்றம்

கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 தொடர் கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

நடப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்த 4 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் தோற்றால் டி20 தொடரும் பறிபோய்விடும்.

இந்திய அணியை பொறுத்தவரை தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது. ஆனால், இன்றைய போட்டியில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

“யார்ரா இந்த பொடியன்” இந்திய வீரரை கண்டு ஆடிப்போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.. முதல் டி20ல் திருப்பம்!“யார்ரா இந்த பொடியன்” இந்திய வீரரை கண்டு ஆடிப்போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.. முதல் டி20ல் திருப்பம்!

காயம்

காயம்

தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயருக்கும், வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டதால் , இன்றைய போட்டியில் அவர்கள் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.இதனால் தமிழக வீரர் ஷாரூக்கானுக்கு இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தீபக் சாஹருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பெறலாம்.

யோசனை

யோசனை

இந்திய அணி தொடர்ந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதனால் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கலாம் என்ற யோசனையில் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தொடக்க வீரர் இஷான் கிஷன் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அபாயம்

அபாயம்

மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை தொடக்க வீரர் பிராண்டன் கிங், பொலார்ட் ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்,. பொலார்ட் இந்த தொடரையும் இழந்தால் அவரது கேப்டன் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

India vs WI 1st T20I: Predictable Playing 11, TV Info | OneIndia Tamil
பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இந்திய உத்தேச அணி 1, ரோகித் சர்மா, 2, இஷான் கிஷன், 3, விராட் கோலி, 4, ரிஷப் பண்ட், 5, சூர்யகுமார் யாதவ், 6ஷாரூக்கான்/ஸ்ரேயாஸ் ஐயர், , 7, சர்துல் தாக்கூர், 8, புவனேஸ்வர் குமார் 9, ஹர்சல் பட்டேல், 10, பிஸ்னாய், 11, சாஹல்.

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச அணி 1,கெயில் மெயர்ஸ், 2,பிராண்டன் கிங் 3,நிக்கோலஸ் பூரான், 4,ராஸ்டன் செஸ், 5,பொலார்ட், 6,பொவேல். 7,ஜேசன் ஹோல்டர். 8,ஓடியன் ஸ்மித், 9,ரோமரியோ செஃப்ர்ட்,10,பெபியன் ஆலன் 11, கொட்ரேல்

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ind vs WI 2nd t20, India forced change in playing xi இந்திய அணியில் 2 வீரர்களுக்கு காயம்.. தமிழக வீரருக்கு அடித்த லக்.. பிளேயிங் லெவனில் திடீர் மாற்றம்
Story first published: Friday, February 18, 2022, 14:30 [IST]
Other articles published on Feb 18, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X