For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7 சிக்சர்கள்.. 2 ஓவரில் 42 ரன்கள்.. ரூத்ரதாண்டவம் ஆடிய சூர்யகுமார்.. இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா

கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது.

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.

ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், அவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கினார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

தொடக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினார். ருத்துராஜ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலி இடத்தில் விளையாடி அதிரடியாக விளையாடினார். ஸ்ரேயாஸ் 16 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு

இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினாலும், சிங்கிள்ஸ் ஆட தவறினார். இதனால் 31 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் களமிறங்கிய ரோகித் சர்மா 15 பந்துகளை எதிர்கொண்ட 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனையடுத்து இந்திய அணி 93 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

27 பந்துகளில் அரைசதம்

27 பந்துகளில் அரைசதம்

இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக சூரியகுமார் குமார் யாதவ் தனது டிரெட் மார்க் ஷாட் மூலும் சிக்சர்களை பறக்கவிட்டார். 27 பந்துகளில் அவர் அரைசதம் விளாசினார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

மறுமுனையில் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி சூரியாவுக்கு நல்ல ஆதரவு வழங்கினார். இந்த ஜோடி கடைசி 5 ஓவரில் 86 ரன்கள் விளாசியது. சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இதில் 7 சிக்சர்கள் அட்ங்கும். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியை வென்றால் இந்தியா நம்பர் 1 இடத்தை தரவரிசையில் பிடித்துவிடும்.

Story first published: Sunday, February 20, 2022, 21:17 [IST]
Other articles published on Feb 20, 2022
English summary
Ind vs WI 3rd t20- Surya kumar yadav brilliant performance set 185 runs as target7 சிக்சர்கள்.. 2 ஓவரில் 42 ரன்கள்.. ரூத்ரதாண்டவம் ஆடிய சூர்யகுமார்.. இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X