For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.. உள்ளே வந்த ஷமி, குல்தீப்.. அதிர வைத்த கேப்டன் கோலி! #INDvsWI

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் கோலி அணித் தேர்வில் அதிரடி முடிவை எடுத்தார்.

எப்போதும் அணியை மாற்றத் தயங்காத கோலி, இந்த முறை இரண்டு முக்கிய வீரர்களை நீக்கி அதிர வைத்துள்ளார்.

மூன்றாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

டி20 தொடர்

டி20 தொடர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்டிங் அச்சுறுத்தும் வகையில் இருப்பது இந்திய அணிக்கு சிக்கலாக அமைந்துள்ளது.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற நிலையில் கேப்டன் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணியை தடுத்து நிறுத்தும் அளவுக்கு அணியில் மாற்றம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது கேப்டன் கோலி இந்திய அணியை அறிவித்தார். அதில் அதிரடியாக இரண்டு மாற்றங்களை செய்திருந்தார்.

அணியின் பலவீனம்

அணியின் பலவீனம்

இந்திய அணியின் பலவீனம் பந்துவீச்சு தான் என்ற நிலையில் இரண்டு பந்துவீச்சாளர்களை நீக்கி விட்டு, இந்த தொடரில் இதுவரை இடம் பெறாத இரண்டு பந்துவீச்சாளர்களை களமிறக்கி இருக்கிறார் கோலி.

இரு வீரர்கள் நீக்கம்

இரு வீரர்கள் நீக்கம்

ஆல்-ரவுண்டர் ஜடேஜா மற்றும் சுழற் பந்துவீச்சாளர் சாஹல் நீக்கப்பட்டனர். இவர்கள் இருவருமே முக்கிய வீரர்களாக கருதப்பட்ட நிலையில் அவர்களை நீக்கி அதிர வைத்துள்ளார் கோலி.

உள்ளே வந்த ஷமி, குல்தீப்

உள்ளே வந்த ஷமி, குல்தீப்

ஜடேஜாவுக்கு பதில் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடருக்குப் பின் குல்தீப் யாதவ் இந்திய அணியில் வாய்ப்பின்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

மூன்றாவது போட்டி நடைபெறும் மும்பை ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்காது என்பதால் ஜடேஜாவை நீக்கி விட்டு, கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம் - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், தீபக் சாஹர், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி

Story first published: Wednesday, December 11, 2019, 19:57 [IST]
Other articles published on Dec 11, 2019
English summary
IND vs WI : Captain Virat Kohli dropped Jadeja and Chahal for 3rd T20
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X