For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னைக்கு ரன் மழை உறுதி.. நிறைய சிக்ஸ் அடிக்கப் போறாங்க.. ஆனா முதல்ல பேட்டிங் ஆடணும்! #INDvsWI

மான்செஸ்டர் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பை போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் ரன் மழை கொட்டப் போவதால் ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண பரபரப்பாக தயாராகி வருகிறார்கள்.

நிச்சயம் அதிக ரன்கள் அடிக்கப்படும் என கூறுவதற்கு காரணம் போட்டி நடைபெற உள்ள மைதானம் தான்.

செம ட்விஸ்ட் வைத்த செம ட்விஸ்ட் வைத்த "ஜாம்பவான்" கிறிஸ் கெயில்.. வெ.இண்டீஸ் கேப்டனுக்கே தெரியாதாம்!

மூன்று போட்டிகள்

மூன்று போட்டிகள்

மான்செஸ்டர் நகரின் ஓல்ட் ட்ராபோர்டு மைதானத்தில் தான் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பொடி நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை மூன்று லீக் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்று உள்ளது.

போட்டிகள்

போட்டிகள்

உலகக்கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் நடந்த முதல் போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டி. அந்தப் போட்டியில் இந்தியா அபாரமாக ரன் குவித்து 336 ரன்கள் எடுத்தது. அடுத்து நடந்த இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டியில் இங்கிலாந்து அணி 397 ரன்கள் குவித்தது. அதன் பின் நடந்த நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் நியூசிலாந்து 291 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 286 ரன்களும் அடித்தன.

சிக்ஸர் மழை

சிக்ஸர் மழை

இப்படி ஒவ்வொரு போட்டியிலும் 300+ அல்லது அதை ஒட்டிய அளவு ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் இந்தியா - பாகிஸ்தான் போட்டி தவிர்த்து மற்ற இரண்டு போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

உலக சாதனை

உலக சாதனை

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 25 சிக்ஸர்கள் அடித்து ஒருநாள் போட்டியில் உலக சாதனை செய்தது. அந்தப் போட்டியில் இயான் மார்கன் மட்டும் 17 சிக்ஸர்கள் அடித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் மிரட்டல்

வெஸ்ட் இண்டீஸ் மிரட்டல்

அடுத்து நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டுமே 13 சிக்ஸர்கள் அடித்தது. இந்திய அணிக்கு எதிராகவும் வெஸ்ட் இண்டீஸ் நிறைய சிக்ஸர்கள் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பழக்கமான மைதானம்

பழக்கமான மைதானம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், இரு அணிகளுமே ஓல்ட் ட்ராபோர்டு மைதானத்தில் ஒரு போட்டியில் ஆடியுள்ளன. எனவே, மைதானம் குறித்து தகுந்த திட்டங்களோடு தான் இரு அணிகளுமே இன்று களமிறங்கும். ஆனால். டாஸ் மிகவும் முக்கியம்.

டாஸ் முக்கியம்

டாஸ் முக்கியம்

காரணம், முதலில் பேட்டிங் செய்யும் அணி தான் மூன்று உலகக்கோப்பை லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இன்று டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய ஆர்வமாக இருக்கும். டாஸில் வென்று, பேட்டிங் தேர்வு செய்தால், பாதி வெற்றி கிடைத்தது போலத் தான்!

Story first published: Thursday, June 27, 2019, 12:21 [IST]
Other articles published on Jun 27, 2019
English summary
IND vs WI Cricket World cup 2019 : 300 plus scores on the offer for India vs West Indies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X