For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நேரத்தில் காப்பாத்திட்டாங்க.. இவங்க 2 பேரும் இல்லைனா இந்தியா ஜெயிச்சுருக்காது! #INDvsWI

ப்ளோரிடா : இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் க்ருனால் பண்டியா, ரவீந்திர ஜடேஜா எடுத்த 20 ரன்கள் தான்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது டி20 போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறைப்படி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அப்போது க்ருனால் பண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆடிய சிறிய இன்னிங்க்ஸ் தான் அணியை கடைசியில் காப்பாற்றியது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் முதலில் அபாரமாக இருந்தது. ரோஹித் சர்மா - ஷிகர் தவான் அபார துவக்கம் அளித்தனர். தவான் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரோஹித் அபாரம்

ரோஹித் அபாரம்

ரோஹித் சர்மா தொடர்ந்து சிறப்பாக ஆடி 51 பந்துகளில் 67 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து ரிஷப் பண்ட் 4, மனிஷ் பாண்டே 6, கோலி 28 ரன்களில் வெளியேற இந்தியா தடுமாறத் துவங்கியது. ரன் ரேட் லேசாக சரிந்தது.

கடைசி ஓவர் ஆட்டம்

கடைசி ஓவர் ஆட்டம்

இந்தியா 150 ரன்களை எட்டும் என்றே கருதப்பட்டது. ஆனால், க்ருனால் பண்டியா, ஜடேஜா கடைசி ஓவரில் 3 சிக்ஸ் அடித்து 20 ரன்கள் குவித்தனர். அது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா 20 ஓவர்களில் 167 ரன்கள் குவித்தது.

வெ.இண்டீஸ் பேட்டிங்

வெ.இண்டீஸ் பேட்டிங்

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நரைன் 4, லீவிஸ் 0 ரன்கள் எடுத்து சுமாரான துவக்கம் அளித்தனர். எனினும், பூரன், பாவெல் ஜோடி போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பக்கம் சாய்த்தனர். பாவெல் அதிரடி ஆட்டம் ஆடி 34 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.

குறுக்கிட்ட மழை

குறுக்கிட்ட மழை

16வது ஓவரின் போது மின்னல் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்ததால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போட்டி கைவிடப்பட்டு, இந்திய அணி டிஎல்எஸ் முறைப்படி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

ஒருவேளை ஜடேஜா, க்ருனால் பண்டியா கடைசி ஓவரில் 20 ரன்கள் குவிக்காமல் போயிருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டு விக்கெட்களை இழக்காமல் ஆடி இருக்கலாம். அப்படி நடந்திருந்தால், இந்திய அணிக்கு டிஎல்எஸ் முறையில் சிக்கல் ஏற்பட்டு, தோல்வி அடைந்திருக்கக் கூடும்.

Story first published: Monday, August 5, 2019, 16:37 [IST]
Other articles published on Aug 5, 2019
English summary
IND vs WI : Krunal Pandya, Jadeja are the major reason for the victory in 2nd T20
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X