எந்த இந்திய பவுலரும் செய்யாத சாதனை.. ஹாட்ரிக்கில் புது வரலாறு படைத்த குல்தீப் யாதவ்!

விசாகப்பட்டினம் : இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூன்று விக்கெட்களை வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார் குல்தீப் யாதவ்.

ஹாட்ரிக் விக்கெட் என்பதே பெரிய சாதனை எனும், நிலையில் அதிலும் எந்த இந்திய பந்துவீச்சாளரும் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளார் குல்தீப்.

சிக்ஸர் மழை.. டபுள் சதம்.. அதிரடி விக்கெட் வேட்டை.. வெ.இண்டீஸ்-க்கு சம்மட்டி அடி கொடுத்த இந்தியா!

இரண்டாவது ஒருநாள் போட்டி

இரண்டாவது ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

ரோஹித் 159, ராகுல் 102,ஸ்ரேயாஸ் ஐயர் 53, ரிஷப் பண்ட் 39 ரன்கள் குவிக்க இந்திய அணி 50 ஓவர்களில் 387 ரன்கள் குவித்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இமாலய இலக்காக 388 ரன்களை நிர்ணயித்தது.

வெ.இண்டீஸ் அதிரடி

வெ.இண்டீஸ் அதிரடி

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் ஒரு புறம் நங்கூரமாக நின்று பேட்டிங் செய்ய மற்ற வீரர்கள் அதிரடியாக ஆட முயன்று வந்தனர். பூரன் 47 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

திருப்பம்

திருப்பம்

5 விக்கெட்கள் வீழ்ந்த பின்னும் ஷாய் ஹோப் களத்தில் இருந்ததால் இந்திய அணிக்கு சிக்கல் நீடித்து வந்தது. அப்போது தான் குல்தீப் யாதவ் 33வது ஓவரில் பெரிய திருப்பத்தை கொடுத்தார்.

குல்தீப் யாதவ் ஹாட்ரிக்

குல்தீப் யாதவ் ஹாட்ரிக்

குல்தீப் யாதவ் அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் ஷாய் ஹோப், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப் என மூன்று விக்கெட்களை வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஒருநாள் போட்டிகளில் இது குல்தீப் யாதவ்வின் இரண்டாவது ஹாட்ரிக் சாதனை ஆகும்.

இந்திய அளவில் முதல் முறை

இந்திய அளவில் முதல் முறை

இந்திய அளவில் ஒருநாள் போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக் எடுத்த ஒரே இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தான். இதுவரை சேத்தன் சர்மா, கபில் தேவ், ஷமி, குல்தீப் யாதவ் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் இந்திய அளவில் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர்.

அதிக ஹாட்ரிக் சாதனை பட்டியல்

அதிக ஹாட்ரிக் சாதனை பட்டியல்

குல்தீப் யாதவ் மட்டுமே இந்திய அளவில் இரண்டு முறை ஹாட்ரிக் சாதனை செய்துள்ளார். உலக அளவில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டி ஹாட்ரிக் வீழ்த்திய வீரர்களில் குல்தீப் ஆறாவது வீரராக இணைந்துள்ளார்.

சாதனைப் பட்டியல்

சாதனைப் பட்டியல்

மலிங்கா 3 முறையும், வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டாக், சமிந்தா வாஸ், ட்ரென்ட் பவுல்ட், குல்தீப் யாதவ் ஆகியோர் இரண்டு முறையும் ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை செய்துள்ளனர்.

தள்ளிப் போன 100வது விக்கெட்

தள்ளிப் போன 100வது விக்கெட்

இந்தப் போட்டியில் 10 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஒருநாள் அரங்கில் 99 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தால் 100 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டி இருப்பார். எனினும், அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : Kuldeep Yadav got his second Hatrick in ODI. He is the only Indian bowler to have two Hatrick in ODI’s.
Story first published: Wednesday, December 18, 2019, 22:29 [IST]
Other articles published on Dec 18, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X