நாடுதான் முதல்ல.. ஐபிஎல் நட்புலாம் அப்புறம்தான்.. முட்டிக் கொண்ட ரோஹித் - பொல்லார்டு.. பரபரப்பு!

முட்டிக் கொண்ட ரோஹித் - பொல்லார்டு... இதான் காரணமாம்| Reason behind Pollard unfollowed Rohit Sharma

மும்பை : திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் - துணை கேப்டனாக ஆடி வந்த ரோஹித் சர்மா மற்றும் கீரான் பொல்லார்டு ட்விட்டரில் முட்டிக் கொண்டனர்.

ஆனால், இதன் பின்னணி குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்காகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இது உண்மை அல்ல. ஆம், இது எல்லாமே விளம்பரம் என தெரிய வந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் முக்கிய வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் முக்கிய வீரர்கள்

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிக வெற்றிகரமாக வலம் வருகிறது. நான்கு முறை கோப்பை வென்று அசத்தி உள்ளது. அந்த அணியின் முக்கிய தூண்களாக இருப்பவர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் கீரான் பொல்லார்டு.

கேப்டன் கீரான் பொல்லார்டு

கேப்டன் கீரான் பொல்லார்டு

சமீபத்தில் கீரான் பொல்லார்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதிக அனுபவம் கொண்ட அவரை, 2020 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து கேப்டனாக நியமித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

திடீர் பரபரப்பு

திடீர் பரபரப்பு

ரோஹித் சர்மா - பொல்லார்டு களத்தில் நட்புடன் இருக்கும் நிலையில், சமீபத்தில் பொல்லார்டு ட்விட்டரில், ரோஹித் சர்மாவை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். அப்போது லேசான பரபரப்பு எழுந்தது.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 19 நடக்க உள்ள நிலையில், இந்த நிகழ்வு குழப்பத்தை ஏற்படுத்தியது. பொல்லார்டு இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் நீடிக்கிறார். அப்புறம் ஏன் இப்படி நடந்து கொண்டார்? என்ற கேள்வி எழுந்தது.

ரோஹித் சர்மா பதில்

ரோஹித் சர்மா பதில்

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரோஹித் சர்மா ட்விட்டரில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு "ஹேப்பி.. அன்பிரெண்ட்ஷிப் டே" என குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோ இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடருகுக்காக எடுக்கப்பட வீடியோ.

நட்பு முக்கியம் அல்ல

அதில் ரோஹித் சர்மா, பாதி வழியில் கீரான் பொல்லார்டை இறக்கி விடுவது போல படமாக்கப்பட்டு இருந்தது. அதாவது, நாடு என்று வந்துவிட்டால் உன் நட்பு முக்கியமல்ல என்று கூறுவது போல இருந்தது அந்த விளம்பரம்.

ரோஹித் ஓய்வு

ரோஹித் ஓய்வு

அட.. ஒரு விளம்பரத்துக்கு தான் இவ்வளவு பில்டப்பா? என சில ரசிகர்கள் கடுப்பானார்கள். இதில் இன்னொரு முக்கிய விஷயமும் உள்ளது. ரோஹித் சர்மாவுக்கு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என்ற பேச்சும் உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : Reason behind Kieron Pollard unfollowed Rohit Sharma in twitter revealed by Rohit Sharma.
Story first published: Thursday, November 21, 2019, 19:58 [IST]
Other articles published on Nov 21, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X