For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

22 வருட சாதனை காலி.. கோலியை ஓரங்கட்டி உலகிலேயே நம்பர் 1 இடத்தை பிடித்து மிரள வைத்த ஹிட்மேன்!

Recommended Video

பல சாதனைகள்... உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா

கட்டாக் : "ஹிட்மேன்" ரோஹித் சர்மா மூன்றாவது ஒருநாள் போட்டியில் 22 வருட சாதனை ஒன்றை முறியடித்து அசத்தி இருக்கிறார்.

அத்துடன் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியை முந்தி அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் உலக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

முக்கியமான இந்தப் போட்டியில் அரைசதமும் அடித்து தெறிக்க விட்டார் ரோஹித் சர்மா.

மூன்றாவது ஒருநாள் போட்டி

மூன்றாவது ஒருநாள் போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்ற நிலையில், பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ராகுல் - ரோஹித் சர்மா துவக்கம்

ராகுல் - ரோஹித் சர்மா துவக்கம்

அடுத்து ஆடிய இந்திய அணிக்கு ராகுல் - ரோஹித் சர்மா மீண்டும் அபார துவக்கம் அளித்தனர். ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி 63 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மா சாதனை

ரோஹித் சர்மா சாதனை

ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் 9 ரன்களை கடந்த போது ஒரே ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த துவக்க வீரர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்தார்.

சனத் ஜெயசூர்யா சாதனை

சனத் ஜெயசூர்யா சாதனை

சனத் ஜெயசூர்யா 1997ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் 2387 ரன்கள் குவித்து இருந்தார். அந்த சாதனையை முறியடித்துள்ள ரோஹித் சர்மா 2019ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் 2442 ரன்கள் குவித்துள்ளார்.

கோலி இரண்டாம் இடம்

கோலி இரண்டாம் இடம்

இதே பட்டியலில் மூன்றாவது போட்டியில் பேட்டிங் செய்யும் முன் கோலி இரண்டாம் இடத்தில் இருந்தார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் முதல் இடம்

ஒருநாள் போட்டிகளில் முதல் இடம்

ஒருநாள் போட்டிகளில் கோலி 1316 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ரோஹித் சர்மா 1490 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். 2019ஆம் ஆண்டின் முடிவில் ரோஹித் சர்மா தான் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களில் முதல் இடத்தில் இருப்பார்.

ரோஹித் சதங்கள்

ரோஹித் சதங்கள்

2019ஆம் ஆண்டில் ரோஹித் சர்மா ஏழு ஒருநாள் போட்டி சதங்கள் அடித்துள்ளார். அதில் ஐந்து சதங்கள் உலகக்கோப்பை தொடரில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, இந்த ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ரோஹித் சர்மா முதல் இடத்தில் நீடிக்கிறார்.

Story first published: Sunday, December 22, 2019, 20:36 [IST]
Other articles published on Dec 22, 2019
English summary
IND vs WI : Rohit Sharma broke 22 year old Sanath Jayasuriya record in the third ODI against West Indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X