For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது அவுட் தான்.. ஆனா இந்தியா ஜெயிச்சுருச்சு.. டென்சன் ஏற்றிய கடைசி ரன்.. தீர்ப்பை மாற்றிய அம்பயர்!

கட்டாக் : மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 பந்துகள் மீதமிருந்த போதே வெற்றி பெற்றது.

எனினும், கடைசி ரன் எடுக்கப்பட்ட போது களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது. ஷர்துல் தாக்குர் ரன் அவுட் ஆன நிலையில், மூன்றாவது அம்பயர் வேறு தீர்ப்பை சொல்லி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

கடும் மோதல்

கடும் மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தான் தொடரைக் கைப்பற்றும் என்ற நிலையில் இரு அணிகளும் கடுமையாக மோதின.

வெ.இண்டீஸ் இன்னிங்க்ஸ்

வெ.இண்டீஸ் இன்னிங்க்ஸ்

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிக்கோலஸ் பூரன் 89, கீரான் பொல்லார்டு 74ரன்கள் அடித்து கை கொடுக்க அந்த அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழந்து 315 ரன்கள் குவித்தது.

இந்தியா சேஸிங்

இந்தியா சேஸிங்

அடுத்து இந்தியா 316 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்த போது முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ரோஹித், ராகுல், கோலியின் அரைசதங்களால் வேகமாக முன்னேறியது.

மிடில் ஆர்டர் சொதப்பல்

மிடில் ஆர்டர் சொதப்பல்

எனினும், மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் 7, ரிஷப் பண்ட் 7, கேதார் ஜாதவ் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததால் தடுமாறியது. கடைசி நான்கு ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் கோலியும் ஆட்டமிழந்தார்.

2 ஓவர்களில் 7 ரன்கள்

2 ஓவர்களில் 7 ரன்கள்

அடுத்து ஜடேஜா - ஷர்துல் தாக்குர் ஜோடி சேர்ந்தனர். ஷர்துல் தாக்குர் அதிரடியாக ரன் குவித்தார். கடைசி 2 ஓவர்களில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் 49வது ஓவரை சந்தித்தார் ஜடேஜா.

ஒரு ரன் மட்டுமே தேவை

ஒரு ரன் மட்டுமே தேவை

49வது ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 6 ரன்களை அடித்தார் ஜடேஜா. இன்னும் ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் ஐந்தாவது பந்தை தட்டி விட்ட அவர் ஒரு ரன் ஓடினார்.

ரன் அவுட்

ரன் அவுட்

எதிரில் இருந்த ஷர்துல் தாக்குர் விரைவாக ஓடி வந்தாலும், டைரக்ட் ஹிட்டால் ரன் அவுட் ஆனார். அதை உறுதிப்படுத்த வேண்டி கள அம்பயர், மூன்றாவது அம்பயரிடம் முடிவை அனுப்பி வைத்தார். அதனால், பரபரப்பு எழுந்தது.

நோ பால்

நோ பால்

மூன்றாவது அம்பயர் ரன் அவுட் ரீப்ளே பார்க்கும் முன், ஐந்தாவது பந்து நோ பால் என அறிவித்து பரபரப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இந்தியாவுக்கு நோ பால் மூலம் கடைசி ஒரு ரன் கிடைத்ததால் வெற்றி பெற்றது. 8 பந்துகள் மீதமிருந்த நிலையில் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தது இந்தியா.

ரன் அவுட் இல்லை

ரன் அவுட் இல்லை

ஷர்துல் தாக்குர் ரன் அவுட் தான் என்றாலும் அதற்கு முன்பே நோ பால் வீசப்பட்டு, இந்தியா வென்றதாக கருதப்படும் என்பதால் அவரது ரன் அவுட் போட்டியில் எடுத்துக் கொள்ளப்படாது.

ஆட்டநாயகன் கோலி

ஆட்டநாயகன் கோலி

ஷார்துல் தாக்குர் 6 பந்துகளில் 17 ரன்கள் குவித்து அசத்தலாக ஆடினார். ஜடேஜா 31 பந்துகளில் 39 ரன்கள் குவித்து இருந்தார். 85 ரன்கள் அடித்த கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Story first published: Monday, December 23, 2019, 14:37 [IST]
Other articles published on Dec 23, 2019
English summary
IND vs WI : Shardul Thakur was run out in Last ball but still India wins, as Umpire signalled no ball.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X