சீனியர் வீரர் திடீர் நீக்கம்.. மயங்க் அகர்வாலுக்கு அழைப்பு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

Mayank Agarwal included in ODI squad| ஒருநாள் அணியில் இடம்பெற்ற மயங்க் அகர்வால்

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர் ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக இளம் வீரர் மயங்க் அகர்வால் அணியில் மாற்று துவக்க வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

மயங்க் அகர்வால் இதுவரை டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று வந்த நிலையில், அவருக்கு இது பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்தியா - வெ.இண்டீஸ் தொடர்கள்

இந்தியா - வெ.இண்டீஸ் தொடர்கள்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்திய மண்ணில் நடைபெறுகிறது. இதுவரை டி20 தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன.

தவான் பார்ம் அவுட்

தவான் பார்ம் அவுட்

இந்த தொடர்களுக்கான அணியில் ஷிகர் தவான் இடம் பெற மாட்டார் என முன்பு கூறப்பட்டது. அவர் உலகக்கோப்பை தொடருக்கு பின் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்பதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது.

காயம்

காயம்

இந்த நிலையில், உள்ளூர் டி20 தொடரில் ஆடி வந்த தவான் காலில் பலத்த காயம் அடைந்தார். அதற்காக, தையல் போட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விரைவில் அவர் குணம் அடைவார் என கூறப்பட்டது.

அணியில் சேர்ப்பு

அணியில் சேர்ப்பு

பார்ம் அவுட், காயம் ஆகிய காரணங்களை தாண்டி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் அணியில் தவான் சேர்க்கப்பட்டார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் துவங்க சில நாட்களே இருந்தன.

தவான் நீக்கம்

தவான் நீக்கம்

டி20 தொடர் நெருங்கிய நிலையில், தவான் காயம் குணமாகி மீண்டும் கிரிக்கெட் ஆட சில நாட்கள் ஆகும் என்பதால் அவரை டி20 அணியில் இருந்து நீக்கியது இந்திய அணி நிர்வாகம். அவருக்கு பதில் டி20 அணியில் சஞ்சு சாம்சன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.

ஒருநாள் அணியிலும் நீக்கம்

ஒருநாள் அணியிலும் நீக்கம்

டி20 தொடர் நிறைவடைய இருக்கும் நிலையில், தவான் இன்னும் களத்தில் இறங்கி விளையாடும் அளவுக்கு தகுதி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்தும் ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார்.

மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு

மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு

அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் மாற்று துவக்க வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் உலகக்கோப்பை தொடரிலேயே அணியில் மாற்று வீரராக இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவர் இன்னும் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் கூட ஆடவில்லை.

இனி வாய்ப்பு கிடைக்குமா?

இனி வாய்ப்பு கிடைக்குமா?

ஷிகர் தவான் காயத்தால் நீக்கப்பட்டாலும் அவருக்கு இனி மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து இந்தியா தயாராகி வரும் நிலையில், தவான் நிலை கேள்விக்குறியாக மாறி உள்ளது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், சிவம் துபே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : Shikar Dhawan dropped and Mayank Agarwal included in ODI team
Story first published: Wednesday, December 11, 2019, 18:44 [IST]
Other articles published on Dec 11, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X