கழட்டி விட்ட வீரரை மீண்டும் அழைத்த பிசிசிஐ.. தவான் அதிரடி நீக்கம்.. இந்திய அணியில் பரபர மாற்றம்!

மீண்டும் சஞ்சு சாம்சன்... இந்திய அணியில் மாற்றம்!| Sanju Samson announced as replacement for dahawan

மும்பை : இந்திய டி20 அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவான் காயத்தால் நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்க உள்ள டி20 தொடருக்கான அணியில் தான் இந்த மாற்றம் நடந்துள்ளது.

தவான் உள்ளூர் டி20 தொடரில் காயம் அடைந்த நிலையில் இந்த மாற்றம் நடந்துள்ளது.

இந்திய டி20 அணி

இந்திய டி20 அணி

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் தவான் இடம் பெற்று இருந்தார். அவர் நிதானமாக ஆடுவதாக புகார் இருந்தாலும் அணியில் அதிரடியாக வாய்ப்பு பெற்றார்.

தவான் காயம்

தவான் காயம்

இந்த அணித் தேர்விற்கு முன்னதாக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் ஆடிய போது தவான் முட்டியில் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு தையல் போடப்பட்டு மருத்துவமனையில் இருந்தார்.

தவானுக்கு வாய்ப்பு

தவானுக்கு வாய்ப்பு

அது தெரிந்தும், டிசம்பர் 6 அன்று துவங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் அணியில் அவர் பெயரை சேர்த்தது தேர்வுக் குழு.

சஞ்சு சாம்சன் நீக்கம்

சஞ்சு சாம்சன் நீக்கம்

அதே சமயம், சஞ்சு சாம்சன் பெயர் நீக்கப்பட்டு இருந்தது. அவர் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். வங்கதேச டி20 தொடருக்கான அணியில் இடம் பெற்ற அவர் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை.

விமர்சனம் எழுந்தது

விமர்சனம் எழுந்தது

சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்காமல், அவரை அணியை விட்டு நீக்கியது பெரும் சர்ச்சை ஆனது. பலரும் தேர்வுக் குழுவின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்தனர்.

காயம் குணமாக தாமதம்

காயம் குணமாக தாமதம்

அதே சமயம், தவானின் காயம் குணமாக கூடுதல் நேரம் ஆகும் என கூறப்பட்டது. பிசிசிஐ மருத்துவக் குழு தவானை பரிசோதனை செய்து மருத்துவ அறிக்கை சமர்ப்பித்தது.

டி20 அணியில் நீக்கம்

டி20 அணியில் நீக்கம்

காயம் குணமாகவும், தையல் பிரியவும் அதிக நாட்கள் ஆகும் என்ற நிலையில், அடுத்தகட்ட முடிவை எடுத்தது பிசிசிஐ. தவான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து மட்டும் நீக்கப்பட்டார்.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

தவானுக்கு மாற்று வீரராக, சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் உத்தேச அணியில் இடம் அளித்துள்ளது பிசிசிஐ. இந்த தொடரிலாவது சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வாய்ப்பு பெறுவாரா? அல்லது "வாட்டர் பாய்" வேலை மட்டுமே பார்ப்பாரா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs WI : Shikar Dhawan dropped due to injury, Sanju Samson announced as replacement
Story first published: Wednesday, November 27, 2019, 15:42 [IST]
Other articles published on Nov 27, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X