உங்களால் தான் கோலிக்கு பிரச்சினையே.. ரசிகர்களை விளாசிய ரோகித்?.. பொறுமை இழந்தது ஏன்?

கொல்கத்தா: இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை புதன்கிழமை தொடங்குகிறது.

Virat Kohli மீது வைக்கப்பட்ட விமர்சனம்.. Rohit Sharma கொடுத்த பதிலடி!

ஒருநாள தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடிய நிலையில், டி20 தொடர் அவ்வளவு எளிதாக இருக்காது. ஏன் என்றால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 11 பேருமே அதிரடியாக விளையாட கூடியவர்கள்.

“இந்த முறை பவுலர்கள் ஆதிக்கம்” 3 முன்னணி வீரர்களுக்கு கோடிகளை ஒதுக்கிய ஆர்சிபி..அப்படி என்ன ஸ்பெஷல் “இந்த முறை பவுலர்கள் ஆதிக்கம்” 3 முன்னணி வீரர்களுக்கு கோடிகளை ஒதுக்கிய ஆர்சிபி..அப்படி என்ன ஸ்பெஷல்

உலகக் கோப்பை தொடர் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடர் இந்தியாவுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரோகித் பதில்

ரோகித் பதில்

இந்த நிலையில், வீடியோ கான்பிரசிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மாவிடம் , விராட் கோலி ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் கடுப்பான ரோகித், விராட் கோலியை நான் பார்க்கும் போது எல்லாம், அவர் நல்ல உத்தேவத்துடன் தான் உள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவுக்காக விராட் கோலி விளையாடியுள்ளார்.

அமைதியாக இருங்கள்

அமைதியாக இருங்கள்

விராட் கோலிக்கு நெருக்கடிகளையும், அழுத்தங்களை எல்லாம் எப்படி கையாள வேண்டும் என்றும் நன்றாக தெரியும், நீங்கள் எல்லாரும் அமைதி காத்தாலே அவர் சரியாகிவிடுவார் என்று கோபமாக பதில் அளித்தார். ஒருநாள் தொடர் முடிந்ததும் இதே கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர்.

ஒரு வாரத்தில் இருமுறை

ஒரு வாரத்தில் இருமுறை

அதற்கு, விராட் கோலி ஃபார்ம் குறித்து அணி நிர்வாகத்துக்கு எந்த கவலையும் இல்லை. அவர் தென்னாப்பிரிக்க தொடரில் கூட நன்றாக விளையாடினார். கோலிக்கு எந்த சிக்கலும் இல்லை. விராட் கோலிக்கு நம்பிக்கை தேவைப்படுகிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, நீங்க என்ன பேசுறீங்கனு தெரிஞ்சு தான் பேசுறீங்களா என்று காட்டமாக பதில் அளித்தார்.

கடைசி 6 போட்டி

கடைசி 6 போட்டி

விராட் கோலி சதம் விளாசி கடைசியாக இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. கோலி கடைசியாக விளையாடிய 6 சர்வதேச ஒருநாள் போட்டியில் 2 அரைசதம், 2 டக் அவுட் ஆகியுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் கோலி 20 ரன்களை தாண்டவில்லை. இதனால் கேப்டன் பதவி சென்ற அதிருப்தியில் கோலி இப்படி விளையாடுவதாக விமர்சனம் எழுந்த நிலையில், ரோகித் சர்மா அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ind vs WI t20 series Rohit sharma Latest press conference on virat kohli form உங்களால் தான் கோலிக்கு பிரச்சினையே.. ரசிகர்களை விளாசிய ரோகித்?.. பொறுமை இழந்தது ஏன்?
Story first published: Tuesday, February 15, 2022, 15:10 [IST]
Other articles published on Feb 15, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X