For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்படிலாம் விட்ற முடியாது.. 7 சிக்ஸ் விளாசி ரோஹித்துடன் முட்டி மோதிய கேப்டன்!

Recommended Video

மாறி மாறி முதலிடம் பிடிக்கும் ரோஹித், கோ

மும்பை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மரண அடி அடித்து பல்வேறு சாதனைகளை செய்தார்.

அதில் முக்கியமாக ரோஹித் சர்மாவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்களில் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார்.

இந்தப் போட்டியில் ரோஹித் - கோலி இருவரும் சிக்ஸர் வேட்டை நடத்தினர். இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது.

மூன்றாவது டி20 போட்டி

மூன்றாவது டி20 போட்டி

மூன்றாவது டி20 யில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. ரோஹித் சர்மா, ராகுல் அபார துவக்கம் அளித்து முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் 71 ரன்களும், ராகுல் 91 ரன்களும் சேர்த்தனர்.

கோலி விளாசல்

கோலி விளாசல்

விராட் கோலியும் அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். அவர் 29 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவரது ஆட்டத்தில் 7 சிக்ஸர்கள் பறந்தன. சிக்ஸர் அடிப்பதில் சாதனை மன்னனான ரோஹித் இந்தப் போட்டியில் 5 சிக்ஸ் மட்டுமே அடித்த நிலையில், அவரையே அதிரடியில் மிஞ்சினார் கோலி.

இந்திய அளவில் முதல் இடம்

இந்திய அளவில் முதல் இடம்

கோலி இந்தப் போட்டியில் சொந்த மண்ணில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை செய்தார். மேலும், உலக அளவில் சொந்த மண்ணில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

ரோஹித் - கோலி போட்டி

ரோஹித் - கோலி போட்டி

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பே சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் முதல் இரண்டு இடங்களை மாற்றி, மாற்றி பிடித்து வந்தனர்.

அதே ரன்கள்

அதே ரன்கள்

இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டிக்கு ரோஹித்தை விட ஒரு ரன் முன்னிலையில் இருந்தார் கோலி. இந்தப் போட்டியில் ரோஹித் 71 ரன்கள் எடுத்து கோலியை விட 70 ரன்கள் அதிகம் பெற்று மீண்டும் முதல் இடத்தை பிடித்தார்.

இருவரும் முதல் இடம்

இருவரும் முதல் இடம்

ரோஹித் ஆட்டமிழந்த பின்பு பேட்டிங் செய்ய வந்த கோலி அதிரடியில் ரோஹித்தை முந்தி, 7 சிக்ஸர்கள் விளாசி 70 ரன்கள் குவித்தார். அதன் மூலம் ரோஹித் - கோலி இருவரும் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 2,633 ரன்கள் குவித்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டனர்.

கோலி சராசரி அதிகம்

கோலி சராசரி அதிகம்

எனினும், ரோஹித் 96 இன்னிங்க்ஸ்களில் இந்த ரன்களை எடுத்துள்ள நிலையில், கோலி 70 இன்னிங்க்ஸ்களிலேயே இந்த ரன்களை எடுத்துள்ளார். ரோஹித்தின் டி20 சராசரி 32.10. கோலியின் டி20 சராசரி 52.66 ஆகும்.

அடுத்த இடங்களில்..

அடுத்த இடங்களில்..

இவர்கள் இருவருக்கும் அடுத்த இடங்களில் மார்டின் கப்தில் (2,436 ரன்கள்), ஷோயப் மாலிக் (2,263 ரன்கள்), பிரென்டன் மெக்குல்லம் (2,140 ரன்கள்) உள்ளனர். இவர்களில் மார்டின் கப்தில் மட்டுமே தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

ரோஹித் சாதனை

ரோஹித் சாதனை

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா முதல் சிக்ஸ் அடித்த போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்ஸ் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை செய்தார். உலக அளவில் கிறிஸ் கெயில், ஷாஹித் அப்ரிடி ஆகியோர் மட்டுமே அவரை விட அதிக சிக்ஸர் அடித்துள்ளனர்.

Story first published: Thursday, December 12, 2019, 19:10 [IST]
Other articles published on Dec 12, 2019
English summary
IND vs WI : Virat Kohli catch up Rohit Sharma to share number 1 spot in T20 most run scorers list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X