For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிளந்து கட்டிய சிஎஸ்கே வீரர்.. சின்னக் குழந்தை போல எகிறி குதித்து வெறித்தனமாக கொண்டாடிய கோலி!

Recommended Video

Virat Kohli Pumped Up As Shardul Thakur | ஆச்சரியம் கொடுத்த ஷர்துல் தாகூர்... கொண்டாடிய கோலி

கட்டாக் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டியில் கோலி ஆட்டமிழந்து இந்தியா கடைசி நேரத்தில் தவித்த போது பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்குர் அதிரடி ஆட்டம் ஆடி வெற்றியை உறுதி செய்தார்.

அவர் பவுண்டரிகள் அடித்த போது கேப்டன் கோலி வெறித்தனமாக தன் இருக்கையில் இருந்து எகிறி குதித்து கொண்டாடினார். அந்த வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

ஒருநாள் தொடர் நிலை

ஒருநாள் தொடர் நிலை

மூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்றலாம். தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்ற இக்கட்டான நிலையில் இரு அணிகளும் ஆடின.

டாப் ஆர்டர் அபாரம்

டாப் ஆர்டர் அபாரம்

வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 315 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்ம் ராகுல், கோலி வரிசையாக மூன்று அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர்.

ஜடேஜா - கோலி ஆட்டம்

ஜடேஜா - கோலி ஆட்டம்

மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். ஜடேஜா மட்டுமே கோலியுடன் ஜோடி போட்டு கடைசி வரை பேட்டிங் செய்து வந்தார். விராட் கோலி 47வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

6 விக்கெட்களை இழந்தது

6 விக்கெட்களை இழந்தது

அத்துடன் இந்தியா 6 விக்கெட்களை இழந்தது. அடுத்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். இந்திய அணிக்கு 23 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலை.

போட்டி நிலை

போட்டி நிலை

ஜடேஜா விக்கெட்டை மட்டும் எடுத்தால் கூட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதகமாக போட்டி மாறி விடும் என்ற நிலை. மேலும், அடுத்து வரும் பேட்ஸ்மேன் ஜடேஜாவுக்கு பேட்டிங் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டு ஆட வேண்டும்.

வந்தார் தாக்குர்

வந்தார் தாக்குர்

இதனால், இந்திய ரசிகர்கள் பேச்சு மூச்சு இன்றி போட்டியில் அடுத்து என்ன நடக்கும் என திகிலுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது வந்தார் ஷர்துல் தாக்குர். அவர் வேகப் பந்துவீச்சாளர். இந்திய அணிக்காக மிகக் குறைந்த போட்டிகளில் தான் ஆடி இருக்கிறார்.

அன்று நடந்தது என்ன?

அன்று நடந்தது என்ன?

கடந்த 2019 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அவர் தான் பேட்டிங் செய்தார். அப்போது மலிங்கா வீசிய பந்தில் எல்பிடபுள்யூ ஆகி ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அப்போது எதிரில் ஜடேஜா தான் நின்று இருந்தார்.

ஐபிஎல் பைனல் நினைவுகள்

ஐபிஎல் பைனல் நினைவுகள்

இந்த நிலையில், ஷர்துல் தாக்குரை பார்த்த ரசிகர்களுக்கு ஐபிஎல் பைனல் தான் நினைவுக்கு வந்தது. ஆனால், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஃபோர் அடித்து அனைவரையும் ஆசுவாசப்படுத்தினார்.

இரண்டு பவுண்டரி

இரண்டு பவுண்டரி

அடுத்து 48வது ஓவரில் ஜடேஜாவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் தானே அடித்து ஆட முடிவு செய்தார். ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து தெறிக்க விட்டார். முதலில் சிக்ஸ் அடித்த போது சக இந்திய வீரர்கள் அறையில் இருந்து கொண்டாடினர்.

கேப்டன் கோலி மகிழ்ச்சி

அடுத்ததாகவும் அவர் ஃபோர் அடிக்கவே கேப்டன் கோலி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார். சின்னக் குழந்தை போல இருக்கையில் இருந்து எகிறி குதித்த அவர், கத்திக் கொண்டே கையை காற்றில் குத்தி கொண்டாடினார்.

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்?

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்?

இந்திய அணி 8 பந்துகள் மீதமிருந்த பொது வெற்றி பெற்றது. ஷர்துல் தாக்குர் திடீர் பினிஷராக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பலரும் 2020இல் ஷர்துல் தாக்குர் சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக மாறக் கூட வாய்ப்பு உள்ளது என கூறி வருகின்றனர்.

Story first published: Monday, December 23, 2019, 17:25 [IST]
Other articles published on Dec 23, 2019
English summary
IND vs WI : Virat Kohli celebrates when CSK bowler Shardul Thakur hit back to back boundaries.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X