For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி!

Recommended Video

மாறி மாறி முதலிடம் பிடிக்கும் ரோஹித், கோலி

மும்பை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் முடிந்த நிலையில் ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை வெளியானது.

இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் மூன்று இந்திய வீரர்கள் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளனர்.

டி20 உலகக்கோப்பைக்கு குறி வைத்து இயங்கி வரும் கேப்டன் கோலி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் டென்னில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

2019 50 ஓவர் உலகக்கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறிய இந்திய அணி, அடுத்து 2020 டி20 உலகக்கோப்பையை வென்றே தீருவது என்ற நோக்கத்துடன் அணியை தயார் செய்து வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியா 2 - 1 என வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணி டி20யில் மற்ற அணிகளைக் காட்டிலும் சற்றே பின்தங்கி உள்ளது. அதை ஈடுகட்ட தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளது.

கோலி அதிரடி

கோலி அதிரடி

கேப்டன் விராட் கோலி தானே மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக ஆடி வருகிறார். பொதுவாக அதிரடியாக ஆடாத கோலி, அதிரடி ஆட்டம் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஈடு கொடுக்கும் வகையில் தானும் ஈடு கொடுத்து ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

13 சிக்ஸர்கள் விளாசல்

13 சிக்ஸர்கள் விளாசல்

இந்த தொடரின் 3 போட்டிகளில் 183 ரன்கள் குவித்து அசத்தினார் கோலி. இதில் 12 ஃபோர் அடித்த அவர், 13 சிக்ஸர்கள் விளாசினார். அது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.

அதிக சிக்ஸர்கள்

அதிக சிக்ஸர்கள்

எப்போதும் சிக்ஸர் அடிப்பதில் ஆர்வம் காட்டாத கோலி, டி20 உலகக்கோப்பைக்காக தன்னை மாற்றிக் கொண்டு வருகிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இந்த தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் கோலி தான்.

தரவரிசை முன்னேற்றம்

தரவரிசை முன்னேற்றம்

முதல் போட்டியில் 94* மூன்றாம் போட்டியில் 70* ரன்கள் குவித்த கோலி, டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையிலும் அதிரடியாக முன்னேறி இருக்கிறார். தற்போது ஐந்து இடங்கள் முன்னேறி பத்தாம் இடம் பிடித்துள்ளார்.

ரோஹித், ராகுல் நிலை

ரோஹித், ராகுல் நிலை

மற்ற இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா ஒன்பதாம் இடத்திலும், ராகுல் ஆறாம் இடத்திலும் உள்ளனர். ராகுல் இந்த தொடரில் 164 ரன்கள் குவித்தார். இரண்டு அரைசதங்கள் அடித்து இருந்தார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசை

பந்துவீச்சாளர்கள் தரவரிசை

இந்தியா டி20 போட்டிகளில் புதிய இளம் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி வருவதால் தரவரிசையில் முதல் பத்து இடங்களில் ஒரு இந்திய பந்துவீச்சாளரும் இடம் பெறவில்லை. எனினும், குறைந்த டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள வாஷிங்க்டன் சுந்தர் 14ஆம் இடத்திலும், தீபக் சாஹர் 21ஆம் இடத்திலும் உள்ளனர்.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, தற்போது டி20 போட்டிகளிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கி இருக்கிறது.

Story first published: Thursday, December 12, 2019, 20:00 [IST]
Other articles published on Dec 12, 2019
English summary
IND vs WI : Virat Kohli enters top 10 in ICC T20 ranking. Rahul took 6th rank and Rohit Sharma dropped to 9th rank.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X