For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!

திருவனந்தபுரம் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் மைதானம் முழுவதும் ரசிகர்கள் "தோனி, தோனி" என முழக்கமிட்டனர்.

அதைக் கண்டு கடுப்பான கேப்டன் கோலி "ஏன் இப்படி பண்றீங்க?" என ரசிகர்களை பார்த்து சைகையில் கேட்டார்.

இந்த சம்பவத்திற்கு காரணம், தோனிக்கு மாற்றாக அணியில் இடம் பெற்று இருக்கும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான்.

உஷ்ஷ்ஷ்.. வாயை பொத்துங்க! கோலியை பழிக்குப் பழி வாங்கி.. கிண்டல் செய்த வெ.இண்டீஸ் வீரர்உஷ்ஷ்ஷ்.. வாயை பொத்துங்க! கோலியை பழிக்குப் பழி வாங்கி.. கிண்டல் செய்த வெ.இண்டீஸ் வீரர்

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். தோனி அணியில் இடம்பெறாத நிலையில் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக தொடர்ந்து ஆடி வருகிறார் பண்ட்.

தொடர்ந்து வாய்ப்பு

தொடர்ந்து வாய்ப்பு

எனினும், அவரது பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் பல சொதப்பல்கள் உள்ளன. பேட்டிங்கில் இதுவரை பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. எனினும், அவருக்கு நீண்ட காலம் வாய்ப்பு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

ஆனால், ரிஷப் பண்ட்டுக்கு அணியில் அதிக வாய்ப்பு அளிப்பதை ரசிகர்கள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக, பண்ட் தவறுகள் செய்யும் போது தோனி பெயரை கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோலி கோரிக்கை

கோலி கோரிக்கை

இந்த நிலையில், கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் ரசிகர்கள் பண்ட்டை குறிவைத்து கோஷங்கள் எழுப்பக் கூடாது. தோனி பெயரைக் கூறி அவருக்கு அழுத்தம் தரக் கூடாது என கோரிக்கை விடுத்தார்.

கங்குலி கருத்து

கங்குலி கருத்து

ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி பண்ட் இந்த எதிர்ப்புகளை எதிர்கொண்டு தான் வளர வேண்டும். அவரால் இன்னும் 15 ஆண்டுகள் கழித்து தான் தோனி போல ஆக முடியும். அதனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம் என கூறி குறிப்பிட்டு இருந்தார்.

இரண்டாவது டி20 போட்டி

இரண்டாவது டி20 போட்டி

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரின் இரண்டாவது டி20 போட்டியில் தோனி பெயரை கோஷமிட்டு, பண்ட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் ரசிகர்கள். இதற்கு காரணம், பண்ட் கீப்பிங்கில் செய்த சொதப்பல்.

கேட்ச்சை விட்ட பண்ட்

கேட்ச்சை விட்ட பண்ட்

இந்தப் போட்டியில் இந்தியா 170 ரன்கள் எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக சேஸிங் செய்து வந்தது. அப்போது புவனேஸ்வர் குமார் ஓவரில் பண்ட் ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார்.

தோனி கோஷம்

தோனி கோஷம்

அதைக் கண்ட ரசிகர்கள் "தோனி, தோனி" என கோஷம் எழுப்பத் துவங்கினர். ரிஷப் பண்ட் இதைக் கேட்டு மனம் வெதும்பி ஒரு புன்னகை செய்தார். அவர் அந்த அழுத்தத்தை உணர்வது தெளிவாக தெரிந்தது.

கடுப்பான கோலி

ரசிகர்கள் கோஷத்தை கேட்டு கடுப்பான கோலி, "ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என சைகை காட்டி ரசிகர்களிடம் கேள்வி எழுப்பினார். ஆனாலும், இந்த கோஷம் இனியும் ஓயாது என்றே தெரிகிறது.

Story first published: Monday, December 9, 2019, 20:25 [IST]
Other articles published on Dec 9, 2019
English summary
IND vs WI : Virat Kohli not happy with fans chant Dhoni name to boo Rishabh Pant.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X