For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாத்தி மாத்தி நடத்திக்கலாம்... டி20 உலக கோப்பை தொடர் குறித்து கவாஸ்கர் ஆலோசனை

டெல்லி : இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அது நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

Recommended Video

டி20 உலக கோப்பையை நடத்த கவாஸ்கர் சொன்ன யோசனை

செப்டம்பர் 30ம் தேதி வரை தன்னுடைய எல்லைகளை மூடியுள்ள ஆஸ்திரேலியா, அதுவரை வெளிநாட்டினர் தன்னுடைய நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.

இதையடுத்து, அங்கு டி20 உலக கோப்பை நடைபெறுவது சாத்தியப்படாது என்று கூறியுள்ள முன்னாள் கேப்டன் கவாஸ்கர், கொரோனா வைரஸ் தொற்று ஓரளவிற்கு சரியாகும்பட்சத்தில் இந்த ஆண்டு இந்தியாவிலும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் டி20 உலக கோப்பை தொடர்களை மாற்றி நடத்தலாம் என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா... இந்தியா

ஆஸ்திரேலியா... இந்தியா

டி20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல இந்த தொடரை அடுத்த ஆண்டு இந்தியா எடுத்து நடத்தவுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

செப்டம்பர் 30 வரை அனுமதி மறுப்பு

செப்டம்பர் 30 வரை அனுமதி மறுப்பு

இந்நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக வரும் செப்டம்பர் 30ம் தேதிவரை தன்னுடைய எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ள ஆஸ்திரேலியா அரசு, அதுவரை வெளிநாட்டினர் தங்களது நாட்டிற்கு வர அனுமதி மறுத்துள்ளது. இதனால் டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்துவது சிக்கலாகியுள்ளது.

கவாஸ்கர் ஆலோசனை

கவாஸ்கர் ஆலோசனை

இந்நிலையில் செப்டம்பர் 30 வரை வெளிநாட்டினருக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி மறுத்துள்ளதால், அங்கு இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடத்தப்படுவது சாத்தியப்படாது என்று தெரிவித்துள்ள கவாஸ்கர், கொரோனா சிக்கல் மட்டுப்படும் நிலையில், இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவும் தங்களுக்குள் மாற்றி நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் ஆசிய கோப்பை

டிசம்பரில் ஆசிய கோப்பை

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை இந்தியா நடத்தும் பட்சத்தில் முன்னதாக ஐபிஎல் தொடரையும் செப்டம்பரில் திட்டமிடலாம். இது டி20 உலக கோப்பை தொடரில் வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். இதையடுத்து யூஏஇயில் வரும் டிசம்பர் மாதத்தில் ஆசிய கோப்பையை நடத்திக் கொள்ளலாம் என்றும் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 21, 2020, 18:36 [IST]
Other articles published on Apr 21, 2020
English summary
Sunil Gavaskar proposes T20 World Cup swap between India and Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X