For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை கிரிக்கெட்..!! பாகிஸ்தானை கதற, கதற தோற்கடித்த இந்தியா..! இருவர் அசத்தல் சதம்

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் அர்ஜூன் ஆசாத் மற்றும் 3வது பேட்ஸ்மேன் திலக் வர்மா சதம் அடித்து அசத்தியதன் மூலம் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அர்ஜுன் 121 ரன்களும் மற்றும் திலக் 110 ரன்களும் எடுத்தனர். இருவரின் ரன் குவிப்பும் அணிக்கு பலம் சேர்த்தது.

தலா 3 விக்கெட்டுகள்

தலா 3 விக்கெட்டுகள்

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களான நசீம் ஷா, அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளுடன் இந்திய அணியை கபளீகரம் செய்தனர். மற்ற இந்திய பேட்ஸ் மேன்கள் 20ஐ கூட தாண்டவில்லை.

பாக். தடுமாற்றம்

பாகிஸ்தான் வீரர்கள் 46.4 பந்தில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அதர்வா அங்கோலேகர் 10 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர்களான வித்யாதர் பாட்டீல், சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

245 ரன்களில் காலி

245 ரன்களில் காலி

பாகிஸ்தான் வீரர்கள் 46.4 பந்தில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அதர்வா அங்கோலேகர் 10 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர்களான வித்யாதர் பாட்டீல், சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போராட்டம் தோல்வி

போராட்டம் தோல்வி

சேசிங்கின் போது, பாகிஸ்தான் கேப்டன் ரோகைல் கான் 108 பந்துகளில் 117 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனாலும், அவரது முயற்சி கடைசியில் தோல்வியில் முடிந்தது.

Story first published: Sunday, September 8, 2019, 17:44 [IST]
Other articles published on Sep 8, 2019
English summary
India beat pakistan by 60 runs in u 19 asia cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X