பேட்ஸ்மேனுக்கு கஷ்டமான ஆடுகளம்.. சொல்லி அடித்த சூர்யகுமார்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி

திருவனந்தப்புரம் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Recommended Video

Suryakumar Yadav ஓட Careerஅ மாத்துனது அந்த momentதான் - Ricky Ponting

ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமக செயல்பட்டதால் , இரு அணி பேட்ஸ்மேன்களும் ரன் சேர்க்க சிரமப்பட்டனர்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 4 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. பும்ரா காயம் காரணமாக இடம்பெறவில்லை.

தென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சுதென்னாப்பிரிக்கா 9 ரன்களுக்கு 5 விக்கெட்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்.. அனல் பறந்த இந்திய பந்துவீச்சு

மெர்சல் பந்துவீச்சு

மெர்சல் பந்துவீச்சு

இந்த நிலையில், பும்ராவும் இல்லாத நிலையில், ஆர்ஸ்தீப் சிங் மற்றும் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரும் புது பந்தில் ஓவர்களை இரு முனையிலும் வீசினர். தீபக் சாஹர் ஆட்டத்தின் முதல் ஓவரில் கேப்டன் பெவுமா ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆர்ஸ்தீப் சிங் 2வது ஓவரை வீசினார். 2வது பந்தில் குயின்டன் டி காக் பேந்தை அடிக்க முயன்ற போது அது பேட்டில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனையடுத்து ஆர்ஸ்தீப் சிங் அனல் பறக்க பந்துகளை வீச அதனை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர்.

107 ரன்கள் இலக்கு

107 ரன்கள் இலக்கு

2வது ஓவரின் 5வது பந்தில் ரூசோவ் ரிஷப் பண்டிடம் கேட்ச் ஆனார்.இதே போன்று கடைசி பந்தில் அதிரடி டேவிட் மில்லர் கிளின் போல்ட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் சேர்ப்பதற்குள் அணியின் பாதி பேர் பெவிலியனுக்கு சென்றுவிட்டனர். முன்னணி பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாத நிலையில், தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இறுதியில் கேசவ் மகாராஜ் அபாரமாக விளையாடி 41 ரன்கள் சேர்த்தார்.

தடுமாறிய இந்தியா

தடுமாறிய இந்தியா

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்தது. ஆர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் மற்றும் ஹர்சல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தாஙல வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாக, பெரும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து அரைசதம்

அடுத்தடுத்து அரைசதம்

கேஎல் ராகுல் ஒரு முனையில் நங்கூரம் போட்டு டெஸ்ட் போட்டி போல் விளையாடினார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் தொடக்கத்தில் பொறுமையாக விளையாடினாலும், பிறகு வழக்கம் போல் சிக்சர்களை விளாசினார். 33 பந்துகளை எதிர்கொண்ட அவர் அரைசதம் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இறுதியில் ராகுல் சிக்சர் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்ததும் மட்டுமல்லாமல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India beat south Africa by 8 wickets in 1st t20 பேட்ஸ்மேனுக்கு கஷ்டமான ஆடுகளம்.. சொல்லி அடித்த சூர்யகுமார்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி
Story first published: Wednesday, September 28, 2022, 22:48 [IST]
Other articles published on Sep 28, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X