For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

T20 WC: இங்கிலாந்தை சுளுக்கெடுத்த இந்தியா.. சொதப்பிய சீனியர் வீரர்கள்.. கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

அமீரகம்: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Recommended Video

From 2016 WC to 2021 WC: Things changed in Cricket | OneIndia Tamil

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 17ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. சூப்பர் 12 பிரிவு போட்டிகள் வரும் அக்டோபர் 23ம் தேதி தொடங்கவுள்ளது.

6 ஓவரில் 83 ரன்கள்.. அசாத்திய பேட்டிங் செய்த இஷான் கிஷான்.. மும்பையின் அசுரத்தனமான தொடக்கம்! 6 ஓவரில் 83 ரன்கள்.. அசாத்திய பேட்டிங் செய்த இஷான் கிஷான்.. மும்பையின் அசுரத்தனமான தொடக்கம்!

இந்த தொடரை எதிர்கொள்வதற்கான பயிற்சி போட்டியில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது.

டாஸ்

டாஸ்

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் வீரர்கள் ஜேசன் ராய் 17, ஜோஸ் பட்லர் 18, டேவிட் மலான் 18 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ 49, லிவிங்ஸ்டன் 30, மொயின் அலி 43, ஆகியோர் அதிரடி காட்ட இந்தியாவுக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், இஷான் கிஷான் ஆகியோர் மிரட்டினர். ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய இஷான் கிஷான், அதே ஃபார்மை அப்படியே காட்டினார். 46 பந்துகளை சந்தித்த கிஷான் 70 ரன்கள் குவித்தார். மறுமுனையில் 24 பந்துகளை சந்தித்த கே.எல்.ராகுல் 51 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் ஓப்பனிங் பலமாக உள்ளது தெரியவந்தது. அதே போல வெற்றியும் உறுதியானது.

 அபார வெற்றி

அபார வெற்றி

இதனைத்தொடர்ந்து வந்த விராட்கோலி 11 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களுக்கும் வெளியேறினர். பின்னர் கடைசி சில ஓவர்களில் ரிஷப் பண்ட் 29 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 12 ரன்கள் விளாசி வெற்றி இலக்கிற்கு கொண்டு சென்றனர். இதனால் 19 ஓவர்களிலேயே இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பலம், பலவீனம் என்ன?

பலம், பலவீனம் என்ன?

இந்திய அணியை பொறுத்தவரை டாப் ஆர்டர் பேட்டிங் சற்று பலமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர். இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா அணியுடன் பயிற்சி போட்டி மேற்கொள்ளவுள்ளது. இதற்கு பின்னர் வரும் 24ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் முதல் ஆட்டத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 19, 2021, 11:33 [IST]
Other articles published on Oct 19, 2021
English summary
India beats england in a warm up match for T20 WorldCup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X