For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்தடுத்த அதிரடி.. அடுத்தடுத்த போட்டிகளில் 5 விக்கெட்டுகள்... இந்திய அணியில் நடராஜன் வெற்றிப்பயணம்

கேன்பெரா : ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது.

இதில் ஒருநாள் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை இந்தியா இழந்துள்ளது. முதல் இரு போட்டிகளில் தோல்வியுற்ற இந்திய அணி 3வது போட்டியில் வெற்றி கண்டது.

இந்த போட்டியில் முதல் முறையாக களமிறங்கி யார்க்கர் கிங் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இன்றைய டி20 போட்டியிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஒருநாள் போட்டியில் தோல்வி

ஒருநாள் போட்டியில் தோல்வி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் ஒருநாள் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைநழுவியது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி மூன்றாவது போட்டியில் 13 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி கொண்டுள்ளது.

2 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி

2 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி

இந்த போட்டியின்மூலம் சர்வதேச ஒருநாள் தொடரில் தனது முதல் போட்டியை எதிர்கொண்ட யார்க்கர் கிங் நடராஜன், 10 ஓவர்களில் 70 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். தனது முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்திற்கும் உள்ளானார்.

3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்

3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்

இதையடுத்து தற்போது டி20 தொடரிலும் விளையாடி வருகிறார் நடராஜன். இந்த போட்டியில் 4 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் நடராஜன். லாபுசாக்னே உள்ளிட்ட 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுளளார்.

பும்ராவிற்கு இணையான சாதனை

பும்ராவிற்கு இணையான சாதனை

ஜஸ்பிரீத் பும்ரா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் டி20 போட்டியில் 23 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் தற்போது 30 ரன்களை கொடுத்து நடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. பும்ரா இந்திய அணியின் முக்கிய பௌலராக உள்ள நிலையில் தற்போது அவருக்கு இணையான ரெக்கார்டை நடராஜன் செய்துள்ளார்.

Story first published: Friday, December 4, 2020, 18:14 [IST]
Other articles published on Dec 4, 2020
English summary
India beats Australia by 11 runs to take 1-0 lead in T20I
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X