For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20ல சிறப்பா விளையாடுறாரு... 4வது இடத்துல அவர இறக்கி சோதிக்கலாம்... கபில்தேவ் ஆலோசனை

மும்பை : சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் டி20 வடிவத்தில் ஹர்திக் பாண்டியாவை 4வது இடத்தில் இறக்கி சோதித்து பார்க்கலாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை கேப்டன் விராட் கோலி பரிசோதித்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நிறைவேறாத ஆசை.. 2020ஐ புரட்டி போட்ட அந்த வார்த்தை.. தோனி இப்படி சொல்வார் என யாரும் நினைக்கவே இல்லை!நிறைவேறாத ஆசை.. 2020ஐ புரட்டி போட்ட அந்த வார்த்தை.. தோனி இப்படி சொல்வார் என யாரும் நினைக்கவே இல்லை!

டி20 தொடர் நாயகன்

டி20 தொடர் நாயகன்

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பான தருணங்களை அளித்துள்ளார். மேலும் டி20 தொடரின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். அந்த தொடரில் சிறப்பான கேம் பினிஷராகவும் அவர் விளங்கினார்.

கபில் தேவ் பாராட்டு

கபில் தேவ் பாராட்டு

இதையடுத்து அவரை டெஸ்ட் தொடரிலும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அவர் பௌலிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வாளர்கள் அவரை தேர்வு செய்வார்கள் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் டி20 வடிவத்தில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பரிசோதிக்க கபில் ஆலோசனை

பரிசோதிக்க கபில் ஆலோசனை

மேலும் டி20 வடிவத்தில் ஹர்திக் பாண்டியாவை 4வது இடத்தில் இறக்கி கேப்டன் விராட் கோலி பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட 3 வீரர்களின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டிய கபில், இதில் பாண்டியாவை சோதித்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய அணியை உருவாக்க ஆலோசனை

புதிய அணியை உருவாக்க ஆலோசனை

டி20 உலக கோப்பையை முன்னிட்டு, மயங்க் அகர்வால், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட இளம் வீரர்களை அணி நிர்வாகம் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொண்டு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஐபிஎல்லை இதற்கு சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கபில் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, December 13, 2020, 17:26 [IST]
Other articles published on Dec 13, 2020
English summary
Kapil urged the Indian team management to experiment more in T20s
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X