For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் டோணிக்கு 5வது இடம்

By Veera Kumar

டெல்லி: உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களை போர்பஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. வீரர்களுக்கு போட்டி மூலம் கிடைக்கும் பணம் மற்றும் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியலை வெளியிடுகிறது. இந்த பட்டியலில் சச்சின் முன்பெல்லாம் ஆதிக்கம் செலுத்திவந்தார். இப்போது அவர் ஓய்வு பெற்றபிறகு அடுத்த சச்சினாக சென்னை தலை, டோணி முடிசூட்டிக்கொண்டுள்ளார்.

ரூ.126 கோடி வருமானம்

ரூ.126 கோடி வருமானம்

2013ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்து உள்ள விளையாட்டு வீரர்களில் உலக அளவில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி 5வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.126 கோடி சம்பாதித்துள்ளார்.

மெஸ்சியெல்லாம் தூசி

மெஸ்சியெல்லாம் தூசி

கால்பந்து பிரபலங்களான ரொனால்டோ, லியோனல் மெஸ்சியை விட கடந்த ஆண்டில் டோணி அதிகம் சம்பாதித்து உள்ளார்.

டென்னிஸ் வீரர்கள் ஆதிக்கம்

டென்னிஸ் வீரர்கள் ஆதிக்கம்

17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் ஆகியோர் தலா ரூ.276 கோடி சம்பாதித்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

4வது இடத்தில் மரியா ஷரபோவா

4வது இடத்தில் மரியா ஷரபோவா

கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ், ஃபில் மிக்கெல்சன் ஆகியோர் முறையே, 2 மற்றும் 3வது இடங்களை பிடித்துள்ளனர். டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா டோணிக்கு முந்தைய இடமான 4வது ரேங்கிலும், ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் 6வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Story first published: Thursday, July 24, 2014, 17:33 [IST]
Other articles published on Jul 24, 2014
English summary
It's good times for Indian captain Mahendra Singh Dhoni. After leading India to their first overseas Test win at Lord's after 2011, Dhoni remains the country's most valuable athlete, according to Forbes magazine. Dhoni is the fifth most valuable sportsperson in the world, a list jointly headed by Roger Federer and Tiger Woods.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X