For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கட்டிப்பிடித்து கொண்டாடிய சாஸ்திரி.. கண்ணீரில் சிராஜ்.. ஓடி வந்த நடராஜன்..கொடி நாட்டிய இந்தியா!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் தி கப்பா மைதானத்தில் இந்திய அணி மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்கள். புதிய வீரர் நடராஜன் தொடங்கி பயிற்சியாளர் சாஸ்திரி வரை எல்லோரும் மைதானத்தில் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த போட்டியில் வென்று அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது.

இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ளது. கோலி, பும்ரா, ஜடேஜா, ஷமி, அஸ்வின் போன்ற முக்கியமான வீரர்கள் இல்லாமல் இந்திய அணி கடைசி போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

கோப்பை

கோப்பை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் தி கப்பா மைதானத்தில் இந்திய அணி மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்கள். 33 வருடமாக ஆஸ்திரேலிய அணியை தி கப்பா மைதானத்தில் 33 வருடமாக எந்த அணியும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது இல்லை. இளம் வீரர்களை வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

9 டாப் வீரர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேறிய நிலையிலும் கூட இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உள்ளது. இந்த வெற்றி காரணமாக புதிய வீரர் நடராஜன் தொடங்கி பயிற்சியாளர் சாஸ்திரி வரை எல்லோரும் மைதானத்தில் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்கள். போட்டிக்கு பின் நடராஜன் தனது காலில் பேடை கட்டிக்கொண்டு உற்சாகமாக ஓடி வந்தார்.

உணர்ச்சி

உணர்ச்சி

இன்னொரு பக்கம் ரிஷாப் பண்டை நீண்ட நேரம் கட்டிப்பிடித்த சாஸ்திரி அவரை விடாமல் பாராட்டினார். சிராஜா கண்ணீர்விட்டபடி உற்சாகத்தில் களத்திற்குள் ஓடி வந்தார். எந்த ஒரு வீரரும் முகத்தில் திமிரை காட்டாமல் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்கள். அதிலும் ரஹானே எந்த திமிரும் இல்லாமல் சிரித்தபடி அமைதியாக களத்திற்குள் வந்தது கவனம் ஈர்த்தது.

கொடி

கொடி

போட்டிக்கு பின்பாக இந்திய வீரர்கள் இந்திய தேசிய கொடியை தாங்கியபடி மைதானத்தை வலம் வந்தது இந்திய ரசிகர்களை மேலும் உணர்ச்சிவசப்படுத்தியது. எந்த மைதானத்தில் இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்யப்பட்டார்களே அதே மைதானத்தில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவின் கப்பா கோட்டையை காலி செய்து அங்கு இந்திய கொடியை நாட்டி உள்ளது.

சிறப்பு

சிறப்பு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்றைய ஆட்டம் மிக சிறப்பான ஆட்டமாக உருவெடுத்துள்ளது. இந்திய வெற்றிக்கு மழை வழிவிட, அணியின் கூட்டு முயற்சியால் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது. அதிலும் முழுக்க முழுக்க இளம் வீரர்களை வைத்து இந்திய அணி நிகழ்த்திய இந்த மாயம் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பேசப்படும்.

Story first published: Tuesday, January 19, 2021, 18:21 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
India celebrates the huge victory against Australia in the Border- Gavaskar Series in an emotional way.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X