For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"எவ்வளவு தைரியம் இருக்கணும்".. கோலிக்காக மொத்தமாக திரண்டு வந்த 3 தலைகள்.. அப்படியே அடங்கிய குரல்கள்

டெல்லி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக அணியின் பயிற்சி குழுவில் இருக்கும் மூன்று முக்கிய நபர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் கோலியை மாற்ற வேண்டும் என்று கடந்த சில நாட்களாக விவாதங்கள் நடந்து வருகிறது. கோலி நல்ல பேட்ஸ்மேன், ஆனால் அவரின் கேப்டன்சி அவ்வளவு சிறப்பாக இல்லை என்று புகார் வைக்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து பறந்த போன் கால்.. கோலி சொன்ன வார்த்தையால் மாறிய பிளான்.. ப்பா செம பின்னணி! இந்தியாவிலிருந்து பறந்த போன் கால்.. கோலி சொன்ன வார்த்தையால் மாறிய பிளான்.. ப்பா செம பின்னணி!

முக்கியமாக இந்திய அணியில் ரோஹித் சர்மா, ரஹானே ஆகியோரை கேப்டனாக நியமிக்கலாம் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

கேப்டன்

கேப்டன்

ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அதேபோல் ரஹானே இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டனாக செயல்பட்டார். பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கும் கோலி இதுவரை ஒருமுறை கூட பெங்களூர் அணிக்காக கோப்பையை வென்றது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும்

இதனால் கோலியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரின் இடத்தில் ரோஹித் சர்மாவை ஒருநாள் மற்றும் டி 20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ரஹானேவை டெஸ்ட் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

பதில்

பதில்

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக அணியின் பயிற்சி குழுவில் இருக்கும் மூன்று முக்கிய நபர்கள் குரல் கொடுத்துள்ளனர். அதன்படி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அருண் ரத்தோர், பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

விவாதம்

விவாதம்

கேப்டனை மாற்றுவது தொடர்பான விவாதத்தில் இவர்கள் மொத்தமாக கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். கோலிதான் இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். கோலி தேர்வு செய்யும் வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். கோலியை கேப்டன்சியில் இருந்து நீக்கினால் அது சரியாக இருக்காது.

கேப்டன்சி

கேப்டன்சி

கோலியை கேப்டன்சியில் இருந்து மாற்றினால் அது இந்திய அணிக்குத்தான் சிக்கலாக மாறும். கோலிக்கு எதிராக இணையத்தில் மட்டுமே கருத்துக்கள் வைக்கப்படுகிறது. அவருக்கு எதிராக அணியில் யாரும் பேசுவது இல்லை. அவருக்கு எதிராக பேச ஒரு தைரியம் வேண்டும், ஏனென்றால் கோலி தவறுகள் எதுவும் செய்வதில்லை என்று, இவர்கள் மூவரும் குறிப்பிட்டுள்ளனர்.

மாற்ற கூடாது

மாற்ற கூடாது

எக்காரணம் கொண்டும் கோலியை பதவியில் இருந்து நீக்க கூடாது என்று இவர்கள் மூவரும் உறுதியாக கூறியுள்ளனர். இந்த அணியே கோலி உருவாக்கியதுதான்.அதனால் அவரின் பதவிக்கு எதிராக பேசுவது தவறான முடிவாக இருக்கும் என்று இவர்கள் பிசிசிஐ மீட்டிங்கில் கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, January 26, 2021, 15:41 [IST]
Other articles published on Jan 26, 2021
English summary
India coaching staffs support Virat Kohli to lead the team in all formats.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X