For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை இந்தியாவுக்கா…? அதெல்லாம் நடக்காது.. அந்த அணி சும்மா..! முன்னாள் இங்கி. வீரர் கிண்டல்

லண்டன்:இங்கிலாந்து அணியை பார்க்கும் போது இந்திய அணி சும்மா என்று முன்னாள் வீரர் நாசர் உசைன் கூறியிருக்கிறார்.

இந்திய அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி சிறப்பான பார்மில் இருக்கிறது. கோப்பையை வெல்லும் அணிகளில் இந்தியாவும் ஒன்று என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

India don’t have tough bowling unit says former england player nasser hussain

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி குறித்தும், இந்திய அணி குறித்தும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் உசைன் கூறி இருப்பதாவது: இங்கிலாந்து அணி இந்திய அணியை காட்டிலும் இந்த தொடரில் பலமான அணி.

இந்திய கிரிக்கெட் அணிக்கு இனிமே இந்திய கிரிக்கெட் அணிக்கு இனிமே "காவி" உடை.. தேர்தல் "முடிவு"க்குப் பின் வெளியே வந்த பூனைக்குட்டி!

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏன் என்றால் கடைசியாக நடந்த 4 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் தொடர்ந்து குவித்திருக்கின்றனர். இதை போன்ற பேட்டிங் பலம் இந்திய அணியிடம் இல்லை.

India don’t have tough bowling unit says former england player nasser hussain

ஏனெனில் இங்கிலாந்து அணியில் முதல் 5 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் மொயின் அலி மற்றும் ஸ்டோக்ஸ் போன்றவர்கள் சிறப்பாக ஆடி அணிக்கு ரன்களை சேர்ப்பார்கள். ஆனால் இந்திய அணியிடம் பின்வரிசை ஆட்டக்காரர்கள் பலம் இல்லை.

மேலும் எங்கள் அணியின் ஆல்ரவுண்டர்கள் தரமாக உள்ளனர். அணியின் பந்துவீச்சை காட்டிலும் இந்திய அணியின் பந்துவீச்சு சுமார் தான். ஆகையால் கோப்பை இங்கிலாந்துக்கு தான் என்று தெரிவித்தார்.

Story first published: Friday, May 24, 2019, 12:21 [IST]
Other articles published on May 24, 2019
English summary
India don’t have tough bowling unit says former England player Nasser hussain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X