For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 பந்து… 3 ரன்… த்ரில் மேட்ச்..! 1 ரன்னில் இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்திய அணி

கவுகாத்தி: இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3வது டி20 போட்டியில், ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரை 3-0 எனக் கைப்பற்றியது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்றது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வென்ற நிலையில், டி20 தொடரில் விளையாடி வந்தது.

முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றிய நிலையில், 3வது போட்டி கவுஹாத்தியில் நடைபெற்றது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியது.

71 பந்துகள்.. 10 விக்கெட்டுகள்.. 45 ரன்கள்.. கெய்ல்னா யாரு? மே.இ. தீவுகளை சுருட்டிய இங்கிலாந்து 71 பந்துகள்.. 10 விக்கெட்டுகள்.. 45 ரன்கள்.. கெய்ல்னா யாரு? மே.இ. தீவுகளை சுருட்டிய இங்கிலாந்து

இங்கி. தொடக்கம்

இங்கி. தொடக்கம்

இங்கிலாந்து மகளிர் அணியின் தொடக்க வீரர்களாக வியாட், டாம்மி இணை களமிறங்கியது. இதில், வியாட் 24 ரன்களிலும், டாம்மி 29 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

சொற்ப ரன்களில் அவுட்

சொற்ப ரன்களில் அவுட்

தொடர்ந்து வந்த வீராங்கனைகளில் எலன் ஜோன்ஸ் மட்டும் 26 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி இறங்கியது

இந்திய அணி இறங்கியது

தொடர்ந்து 120 ரன்கள் வெற்றி என்று இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு தொடக்கமே சோகமாய் அமைந்தது. தொடக்க வீராங்கனை ஹர்லின் டியோல் 1 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரோட்ரிக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார்.

மீண்டது இந்தியா

மீண்டது இந்தியா

பின்னர் ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ் இணை இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா டி20 போட்டிகளில் 9வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடியாக ஆட முயன்று 58 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பானது.

த்ரில்லிங்கான ஓவர்

த்ரில்லிங்கான ஓவர்

அடுத்து வந்தவர்களும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வெளியேற, கடைசி ஓவரில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.மைதானமே பரபரப்புக்குள்ளானது.

இந்தியா தோல்வி

மிதாலி ராஜ் களத்தில் மறுமுனையில் இருக்க, புல்மாலி முதல் மூன்று பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட, ஒரு ரன் மட்டுமே எடுத்து இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.

Story first published: Saturday, March 9, 2019, 18:13 [IST]
Other articles published on Mar 9, 2019
English summary
India fails to score three runs in final over, England sweeps T20 series 3-0.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X