For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே வார்த்தையால் ரசிகர்களை அள்ளிய ஆர்ஸ்தீப் சிங்.. சின்ன வயசில் இவ்வளவு புத்தியா.. வேற வெலல்

கிறிஸ்ட்சர்ச் : இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

இந்திய அணி அங்கு கடைசியாக விளையாடிய ஐந்து ஒருநாள் போட்டியிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் முதல் வெற்றியை பெரும் உத்வேகத்துடன் இந்திய அணி நாளைய போட்டியில் விளையாடுகிறது.

கடைசி போட்டியிலாவது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? 2 முக்கிய மாற்றங்கள் செய்யும் இந்தியாகடைசி போட்டியிலாவது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? 2 முக்கிய மாற்றங்கள் செய்யும் இந்தியா

கூட்டணி

கூட்டணி

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக்குடன் நான் விளையாடுவது எனக்கு கூடுதல் சாதகமான விஷயம். ஒரு முனையில் அவர் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். இதனால் எனக்கு சுலபமான காரியமாக ஆகிவிட்டது. களத்திலும் களத்திற்கு வெளியிலும் எங்களுடைய பார்ட்னர்ஷிப்பை நான் நேசிக்கிறேன். எங்களுடைய கூட்டணி நீண்ட நாள் தொடரும் என நம்புகிறேன்.

சுலபமானது கிடையாது

சுலபமானது கிடையாது

என்னுடைய கிரிக்கெட் பயணம் என்பது சுலபமானது கிடையாது. ஒரு வீரராக நான் எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து மட்டுமே நான் கவனம் செலுத்துவேன். மற்றபடி இது சுலபமா இல்லை கடினமா என்பதெல்லாம் நான் யோசிக்க மாட்டேன் எங்களுடைய சக்திக்கு தகுந்தார் போல் சிறப்பாக செயல்பட்டால் நன்றாக உணருவோம்.

சிக்கலும் கிடையாது

சிக்கலும் கிடையாது

அடுத்த ஆண்டு உலக கோப்பை குறித்து நான் யோசிக்கவில்லை. ஒவ்வொரு போட்டியாக கவனம் செலுத்தி அதில் எப்படி சிறப்பாக விளையாட வேண்டும் என்பது குறித்து நான் யோசித்து வருகிறேன். வீரர்கள் சிறப்பாக விளையாடினால் ரசிகர்கள் எங்களை மதிப்பார்கள். நாங்கள் களத்தில் சரியாக செயல்படவில்லை என்றால் மக்கள் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். இதில் கையாள்வதில் எந்த சிக்கலும் கிடையாது.

ரசிகர்களை ஏற்கிறோம்

ரசிகர்களை ஏற்கிறோம்

நாங்கள் இந்திய அணிக்காக விளையாடுகிறோம். இதனால் அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தவும் அன்பைக் காட்டவும் ரசிகர்களுக்கு முழு உரிமை உண்டு. நாங்கள் இரண்டுமே ஏற்றுக் கொள்கிறோம். பந்துவீச்சாளர்களாக என்னுடைய பணி விக்கெட்டுகளை எடுப்பது மட்டும்தான். கிரிக்கெட் வீரராக அனைவருடைய கனவும் இந்தியாவுக்காக ஒரு நாளாவது விளையாட வேண்டும் என்பதுதான்.

என்னுடைய ஆசை

என்னுடைய ஆசை

எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. மழை பெய்யுமா பெய்யாதா என்பதை கட்டுப்படுத்துவதில் எங்கள் கையில் இல்லை. வானிலையை நாங்கள் நிர்ணயிக்க முடியாது. எனவே நாங்கள் எப்போதும் போல் தயாராக இருப்போம். எப்போதெல்லாம் மழையால் ஆட்டம் தடை படுகிறதோ அப்போது போட்டி தொடங்கியதும் எப்படி சிறப்பாக செயல்படுவது என்பதை மட்டும் தான் யோசித்து கொண்டு இருப்போம் .நாளைய ஆட்டத்தில் மழை குறிக்கிடாது என்று நான் நம்புகிறேன் என்று ஆர்ஸ்தீப் சிங் கூறினார்.

Story first published: Tuesday, November 29, 2022, 22:46 [IST]
Other articles published on Nov 29, 2022
English summary
India fast bowler arshdeep singh interview on his game tatics ஒரே வார்த்தையால் ரசிகர்களை அள்ளிய ஆர்ஸ்தீப் சிங்.. சின்ன வயசில் இவ்வளவு புத்தியா.. வேற வெலல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X