For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்குதான் அதிக வாய்ப்பு! ஆனால்..

By Veera Kumar

நாக்பூர்: சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்.. என்ற பாடலுக்கு ஏற்பவே, உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எதுவாக இருக்கும் என்று கேட்டால் உலகின் பல கோடி ரசிகர்களும் இந்தியாவை நோக்கிதான் கை காட்டுவார்கள்.

கடைசியாக நடந்த 3 டி20 தொடர்களிலும் வெற்றி வாகை சூடி, அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது இந்திய டி20 அணி.

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் அடித்தது, இலங்கைக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது, ஆசிய கோப்பையில், பாகிஸ்தான், இலங்கை, யூ.ஏ.இ மற்றும் வங்கதேசத்தை இருமுறை வீழ்த்தி, கோப்பையை வென்றது என இந்திய அணியின் வெற்றி சகாப்தம் தொடர்கிறது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இந்திய அணி கடைசியாக ஆடிய 11 டி20 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளது. அதுவும் மிகவும் அசால்டாக அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது.

இன்று போட்டி

இன்று போட்டி

இந்நிலையில்தான் உலக கோப்பையின் சூப்பர் 10 சுற்று இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா இன்று எதிர்கொள்கிறது.

இரு அணிகள்

இரு அணிகள்

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகள், தகுதி சுற்றில் வெற்றி பெற்று சூப்பர்-10 சுற்றுக்குள் நுழைந்துள்ளன. மற்ற அணிகள் அனைத்தும் டெஸ்ட் அந்தஸ்து கொண்ட பெரிய அணிகள்தான்.

முன்கூட்டிய கணிப்பு

முன்கூட்டிய கணிப்பு

என்னதான் டி20 போட்டிகளில் நாம் கிங்காக இருந்தாலும், இந்த வகை போட்டிகளில் வெற்றி, தோல்வியை முன்கூட்டியே நிர்ணயிப்பது மிக கடினம். 1 ஓவர் கூட மொத்த போட்டியையும் மாற்றிபோட்டுவிடும் என்பதால், டெஸ்ட் மற்றும் 50 ஓவர் போட்டிகளில் இருந்து டி20 முற்றிலும் மாறுபட்டது.

5 உலக கோப்பை

5 உலக கோப்பை

2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக கோப்பை டி20 தொடரை இந்தியா வென்று அசத்தியது. 2009ல் பாகிஸ்தானும், 2010ல் இங்கிலாந்தும், 2012ல் வெஸ்ட் இண்டீசும், 2014ல் இலங்கையும் உலக கோப்பையை வென்றுள்ளது.

காரணம் இதுதான்

காரணம் இதுதான்

இப்படி 5 உலக கோப்பை தொடர்களிலும், 5 வெவ்வேறு நாட்டு அணிகள் கோப்பையை வெல்ல காரணம், எந்த அணிக்குமே வெற்றி வாய்ப்பை முன்கூட்டியே சொல்ல முடியாது என்பதுதான். எனவேதான், இம்முறை இந்தியாவும் மிகுந்த ஜாக்கிரதையோடு போட்டிகளை அணுக வேண்டியுள்ளது.

பெருமை

பெருமை

இந்தியா இம்முறை உலக கோப்பையை வென்றால், அக்கோப்பையை 2வது முறையாக வெல்லும் முதல் அணி என்ற பெருமையோடு, தாயகத்தில் நடந்த போட்டியில் உள்ளூர் அணி வென்றதில்லை என்ற நிலையும் மாறும்.

டோணி ஜாக்கிரதை

டோணி ஜாக்கிரதை

கணிப்புகளை பொய்யாக்கும் போட்டி என்பதால்தான், டோணிகூட ஜாக்கிரதையாக, நாங்கள் இப்போது பைனலை பற்றி சிந்திக்கவில்லை. முதல் போட்டியை பற்றிதான் சிந்திக்கிறோம் என்று பேட்டியொன்றில் சில தினங்கள் முன்பு தெரிவித்தார்.

Story first published: Tuesday, March 15, 2016, 11:54 [IST]
Other articles published on Mar 15, 2016
English summary
Ask any cricketer or a fan, you get the same answer. As we get ready to welcome the main round of the World Twenty20 2016, the overwhelming choice to lift the trophy on April 3 is none other than the hosts - India. Everyone is backing the Mahendra Singh Dhoni-led side to script history at Kolkata's Eden Gardens on April 3 (Sunday).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X