For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசியில் இப்படி நடந்துவிட்டதே.. இந்திய அணி தேடிய வீரர் இவர்தானா.. அதிர்ச்சி அடைந்த தேர்வுக்குழு!

இந்திய அணியின் முக்கியமான இளம் வீரர் ஒருவர் மேற்கு இந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம் பெரிய வைரலாகி உள்ளது.

Recommended Video

Bcci 7 Questions : ஏன் தோத்தீங்க..? அந்த 7 கேள்விகள்..வசமாக மாட்ட போகும் ரவி சாஸ்திரி,கோலி- வீடியோ

டெல்லி: இந்திய அணியின் முக்கியமான இளம் வீரர் ஒருவர் மேற்கு இந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக ஆடிய ஆட்டம் பெரிய வைரலாகி உள்ளது. இந்திய அணியின் தேர்வுக்குழுவை இந்த ஆட்டம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்திய அணியில் உலகக் கோப்பையின் போது மிடில் ஆர்டர் விளையாட சரியான ஆள் கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரில் விளையாட எந்த ஒரு வீரரும் சரியான தேர்வாக இருக்கவில்லை.

இந்திய அணியில் நான்காவது வீரராக கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், விஜய் சங்கர் உள்ளிட்ட பல வீரர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இவர்களை வைத்து இந்திய அணி பலமுறை சோதனை செய்தது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

ஆனால் ஒருமுறை கூட இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் சரியாக ஆடவில்லை. 4வது வீரராக இந்திய அணியில் களமிறங்கிய ரிஷப் பண்ட் மட்டும் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடினார். ஆனால் அவரின் ஐபிஎல் ஸ்டைல் ஆட்டம் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் கூட இதுதான் என்று கூறலாம். ஆம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் கொஞ்சம் வலுவாக இருந்திருந்தால் உலகக் கோப்பையில் இந்தியா வென்று இருக்கும். ஆனால் மிடில் ஆர்டர் வீரர்கள் யாருமே இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் சரியாக கைகொடுக்கவில்லை .

மனிஷ் பாண்டே

மனிஷ் பாண்டே

இந்த நிலையில்தான் இந்திய ஏ அணிக்காக மேற்கு இந்திய தீவுகளில் விளையாடி வரும் மனிஷ் பாண்டே அங்கு 4வது வீரராக இறங்கி அதிரடியாக ஆடி வருகிறார். மிக மோசமான பவுலிங் பிட்சில் அவர் 87 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர் என்று 100 ரன்கள் அடித்துள்ளார். தற்போது இந்திய ஏ அணியின் கேப்டனாக அவர் இருக்கிறார்.

செம பாஸ்

செம பாஸ்

அதேபோல் இந்த தொடர் முழுக்கவே அவர் நான்காவது வீரராக இறங்கி நன்றாக ஆடி வருகிறார். அணியின் கேப்டனாக இருந்து தற்போது தொடர்ந்து இரண்டு வெற்றிகளை குவித்து உள்ளார். இதனால் மேற்கு இந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான அந்த தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

அதே வீரர்

அதே வீரர்

இதனால் இந்திய அணி இத்தனை நாட்கள் தேடிய அந்த மிடில் ஆர்டர் வீரர் இவர்தானோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இவரை முன்பே எடுத்து இருக்கலாமோ, இவ்வளவு நாள் எப்படி தவற விட்டோம், இப்படி மிஸ் செய்துவிட்டோமே என்று தேர்வுக்குழு தற்போது வருத்தம் அடைந்துள்ளது.

Story first published: Wednesday, July 17, 2019, 14:51 [IST]
Other articles published on Jul 17, 2019
English summary
India find its middle-order batsman in West Indies A match - Manish Pandey.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X