தொடர்ச்சியாக 25 "டாட்" பந்துகள்.. நியூசி வேற லெவல் பவுலிங் - அசராமல் "டொக்கு" வைக்கும் ரோஹித்

சவுத்தாம்ப்டன்: ஒருவழியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடங்கிய நிலையில், இந்திய அணி நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

நேற்றைய முதல் நாள் ஆட்டம் முற்றிலுமாக மழையால் பாதிக்கப்பட, இன்று போட்டி எந்தவித சிக்கலும் இன்றி தொடங்கியுள்ளது.

 இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். பிறகு பேட்டியளித்த வில்லியம்சன், தற்போது நிலவும் சவுத்தாம்ப்டன் வானிலைக்கு பவுலிங் செய்வதே சிறந்தது என்று கூறினார்.

அதேபோல், இந்திய கேப்டன் விராட் கோலியும், வில்லியம்சன் கூறியதை ஏற்றுக் கொண்டார். ' நாங்களும் டாஸ் வென்றிருந்தால், பவுலிங் தேர்வு செய்திருப்போம்' என்று கூறியுள்ளார். இதில், முக்கிய அம்சம் என்னவெனில், இந்திய அணி தனது பிளேயிங் லெவனை மாற்றவில்லை.

 அதே வீரர்கள்

அதே வீரர்கள்

இந்திய அணி வீரர்கள் விவரம். ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா என்று பிளேயிங் லெவனில், இந்திய அணி எந்தவித மாற்றமும் மேற்கொள்ளவில்லை.

 50 பார்ட்னர்ஷிப்

50 பார்ட்னர்ஷிப்

இந்நிலையில், தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள ரோஹித், சுப்மன் கில் மிக நிதானமாக பேட்டிங் செய்து வருகின்றனர். பிட்ச் நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என்று சொன்னாலும், போல்ட், சவுதி, ஜேமிசன் ஆகியோரின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்திருக்கிறது. இது உண்மையில் ஆச்சர்யமான விஷயம் தான்.

 அசராத ரோஹித்

அசராத ரோஹித்

அதேசமயம், ரோஹித்திடமும் சரி, கில்லிடமும் சரி அவசரம் இல்லை. நேர்த்தியாக விளையாடுகின்றனர்,. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், 10.3வது ஓவரில் இருந்து, 14.3வது ஓவர் வரை இந்திய அணி ஒரு ரன் கூட எடுக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சரியாக 25 பந்துகள். ரோஹித்தும், கில்லும் அசரவில்லை. 10.3வது ஓவரில் 41 என்றிருந்த ஸ்கோர், 14.3 வரை 41 என்றே மெயின்டெய்ன் செய்யப்பட்டது.

(ரோஹித்தே இவ்ளோ டொக்கு வச்சா, அப்போ புஜாரா???)

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India faced 25 dot balls continuously wtc final - ரோஹித்
Story first published: Saturday, June 19, 2021, 16:35 [IST]
Other articles published on Jun 19, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X