For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் தோனியா? கோலி?.. பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பகிரங்க அறிவிப்பு!

மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் யார் என்பது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

Recommended Video

Indian T20 Team-ன் சிறந்த Captain யாரு? Ravi Shastri சொன்ன பதில் இதுதான்

இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் யாராலும் மறக்க முடியாத இடத்தை பிடித்தவர் தோனி.

ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்து ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்று அசத்தியிருந்தார்.

'நான் செஞ்ச தப்புதான்.. அந்த வீரர் இருந்திருக்கனும்’.. ராஜஸ்தானுடனான தோல்வி.. தவறை விளக்கிய தோனி! 'நான் செஞ்ச தப்புதான்.. அந்த வீரர் இருந்திருக்கனும்’.. ராஜஸ்தானுடனான தோல்வி.. தவறை விளக்கிய தோனி!

கேப்டன் தோனி

கேப்டன் தோனி

களத்தில் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப திடீர் ட்விஸ்ட் கொடுப்பதை தோனியை விட யாராலும் சிறப்பாக செய்திருக்க முடியாது. அதே போல விக்கெட் கீப்பிங்கிற்கு புகழ்பெற்றவர். சாந்தமான குணம், ஆக்ரோஷமான ஆட்டம் என தோனி அனைவரும் விரும்பும் கேப்டனாக இருந்தார். தோனிக்கு பிறகு இந்திய அணியை விராட் கோலி தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்தினார்.

 விராட் கோலி

விராட் கோலி

இந்திய அணியை உலக அரங்கில் மிகவும் ஆக்ரோஷமான அணியாக திகழவைத்தவர் கோலி. தோனிக்கு நிகரான வெற்றி சதவீதத்தை விராட் கோலி பெற்றிருந்தாலும், அவரால் இந்தியாவுக்கு ஒரு ஐசிசி கோப்பையை கூட பெற்றுத் தரமுடியவில்லை. எனவே சமீபத்தில் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் கோலி பதவி விலகவிருக்கிறார்.

ரவிசாஸ்திரி

ரவிசாஸ்திரி

இந்நிலையில் தோனி, கோலி இருவரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார். அதில் அவர், என்னைப் பொறுத்தவரை சிறந்த ஒருநாள், டி20 கேப்டன் என்றால் அது மகேந்திரசிங் தோனிதான். அவர் எந்த கோப்பையைத்தான் வென்றுகொடுக்கவில்லை? ஐபிஎல், சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி தொடர்கள், இரண்டு உலகக் கோப்பைகள் என அனைத்தையும் வென்றுகொடுத்த கேப்டனாக இருக்கிறார். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் தோனியின் கேப்டன்சிக்கு அருகில் கூட எந்த கேப்டனையும் வைத்துப் பார்க்க முடியாது.

 சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸை வழி நடத்தி வருகிறார். 3 முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி, நடப்பாண்டிலும் தோனியின் தலைமையில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது. அதற்கேற்றார் போல ப்ளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக முன்னேறியுள்ளது.

Story first published: Sunday, October 3, 2021, 12:51 [IST]
Other articles published on Oct 3, 2021
English summary
India head coach Ravi Shastri Answer for who is the Best captain in white ball cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X