For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா மோசமான பந்துவீச்சு..பேட்டிங்கால் வென்றது ரோகித் படை.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

கவுகாத்தி : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recommended Video

IND vs SA ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இதன் மூலம் இந்திய அணி தனது சொந்த மண்ணில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை வென்றது.

இந்திய அணியின் பந்துவீச்சு இன்றைய ஆட்டத்தில் மோசமாக இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசியது.

என்ன மைதானம் இது.. இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஆட்டம் நிறுத்தம்.. பாம்பை தொடர்ந்து மற்றொரு சம்பவம்என்ன மைதானம் இது.. இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஆட்டம் நிறுத்தம்.. பாம்பை தொடர்ந்து மற்றொரு சம்பவம்

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்கத்தில் அமைதி காத்தாலும், பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய அணி பவர்பிளே முடிவில் 57 ரன்கள் சேர்த்தது. 37 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 43 ரன்களை விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.5 பவுண்டரிகள், 4 சிக்சர் அடித்த ராகுல் 24 பந்தில் அரைசதம் கடந்தார். ராகுல் 57 ரன்கள் எடுத்த நிலையில், எல்பிடபிள்யூ ஆனார். இதனையடுத்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஜோடி சேர்ந்து தென்னாப்பிரிக்க பந்துவீச்சை மைதானத்தில் சிதற அடித்தனர்.

சூர்யகுமார் அரைசதம்

சூர்யகுமார் அரைசதம்

குறிப்பாக ரபாடா வீசிய பந்துகளை முன் கூட்டியே கணித்து பின்னால் தூக்கி அடித்து ஒரே ஓவரில் 22 ரன்களை குவித்தார். அத்துடன் நிறுத்தாமல் சூர்யகுமார் வீசிய பந்தை எல்லாம் சிக்சருக்கு விரட்ட, அவர் 18 பந்துகளில் அரைசதம் கடந்தார். சூர்யகுமார் 22 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். கடைசி ஓவரில் விளையாடிய தினேஷ் கார்த்திக் சிக்சர், பவுண்டரி என விளாசி 7 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார்.விராட் கோலி 28 பந்தில் 49 ரன்கள் அடிக்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.

சொதப்பிய தொடக்கம்

சொதப்பிய தொடக்கம்

238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. பெவுமா, ரூசோவ் ஆகியோர் டக் அவுட்டாக, ஏய்டன் மார்க்ரம் 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி 47 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து குயின்டன் டி காக், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

டேவிட் மில்லர் அதிரடி

டேவிட் மில்லர் அதிரடி

தீபக் சாஹர் ஓவரை தவிர மற்ற அனைவரின் பந்துவீச்சையும் தென்னாப்பிரிக்க வீரர்கள் அடித்து நொறுக்கினர். சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் 47 பந்துகளில் 106 ரன்கள் விளாசி அசத்தினார். குயின்டன் டி காக் 48 பந்துகளில் 69 ரன்கள் விளாச, 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 221 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

Story first published: Sunday, October 2, 2022, 23:33 [IST]
Other articles published on Oct 2, 2022
English summary
India Historic series win vs South Africa at home soil இந்தியா மோசமான பந்துவீச்சு..பேட்டிங்கால் வென்றது ரோகித் படை.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X