For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கைகொடுக்காத சென்னை ஆட்டம்... 73 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவிப்பு!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்துள்ளது.

இதற்கு ஈடுகொடுத்து ஆட வேண்டிய இந்திய அணி தற்போது 73 ரன்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

578 ரன்களை குவித்த இங்கிலாந்து

578 ரன்களை குவித்த இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்களை குவித்துள்ளது. தொடர்ந்து இந்திய அணி ஆடி வருகிறது.

11 ரன்களில் கேப்டன் அவுட்

11 ரன்களில் கேப்டன் அவுட்

துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் நிலையான ஆட்டத்தை தரத் தவறிய நிலையில், கோலியும் புஜாராவும் நிலைத்து ஆட முயற்சித்த நிலையில் வெறும் 11 ரன்களில் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரஹானேவும் 6 பந்துகளை மட்டுமே விளையாடி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

நிலையான ஆட்டத்தின் தேவை

நிலையான ஆட்டத்தின் தேவை

தற்போது புஜாராவும் ரிஷப் பந்த்தும் ஆடி வருகின்றனர். தற்போதைய நிலையில், விக்கெட்டை இழக்காமல் இந்திய அணி நிலைத்து ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் மற்றும் புஜாரா இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்த நிலையில், தற்போது அந்த ஆட்டம் மீண்டும் அமைய வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தேர்வாகியுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடப்பட்டுவரும் இந்த தொடரில் இந்தியா 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றால் மட்டுமே அதன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 7, 2021, 14:43 [IST]
Other articles published on Feb 7, 2021
English summary
India in big trouble as lost 4 Big Wickets against England
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X