For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை - தொடரிலிருந்து இந்தியா விலகல்? மத்திய அமைச்சரின் அதிரடி பதில்

வரும் 2024ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரை ஐ.சி.சி. தொடர்கள் எங்கு நடைபெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது.

இதில் இந்தியா அண்டை நாடுகளுடன் இணைந்து 3 தொடர்களை நடத்தும் என்று ஐ.சி.சி. அறிவித்தது. 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என்று ஐ.சி.சி. கூறியது.

அந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகைஅந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகை

ஐ.சி.சி.யின் இந்த அறிவிப்பு மற்ற நாடுகளுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் தான் இந்தப் பிரச்சினை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போதே புயல் கிளம்பிவிட்டது

தீவிரவாத தாக்குதல்

தீவிரவாத தாக்குதல்

2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பினர். ஆடுகளத்திலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தப்பிச் சென்றனர். இதனால் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறாமல் இருந்தன.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

பல ஆண்டுகள் கழித்து ஜிம்பாப்வே,மேற்கிந்தியத் தீவுகளை வரவழைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தியது.மேலும் ஐ.பி.எல் தொடரை பார்த்து காப்பி அடித்து தொடங்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தது.ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்ததை அடுத்து நியூசிலாந்து,இங்கிலாந்து ஆகிய நாடுகள் தொடரிலிருந்து வெளியேறியது.

சாம்பியன்ஸ் கோப்பை

சாம்பியன்ஸ் கோப்பை

பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கும் சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை போன்ற தொடரை பாகிஸ்தானில் நடத்த ஐ.சி.சி. முடிவு எடுத்துள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுமா என்று கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்துள்ள மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "பாகிஸ்தானில் உள்ள நிலையை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டுமே இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல முடியும். அதனை மத்திய அரசு பிறகு அறிவிக்கும்" என்று கூறினார்

Recommended Video

இது தான் இப்ப சிக்கல்.. Indian Team-ல் செய்ய வேண்டிய மாற்றங்கள்
அதிருப்தி

அதிருப்தி

ஐ.சி.சி.யின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானையே ஆச்சரியப்படுத்தியது என்பது தான் உண்மை. இருப்பினும் அதனை காட்டிகொள்ளாமல் சாம்பியன்ஸ் கோப்பையை சிறப்பாக நடத்துவோம் என்று பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் ஏற்பட்டுள்ள அதிருப்தியை ஐ.சி.சி.யிடம் பல நாடுகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Thursday, November 18, 2021, 20:23 [IST]
Other articles published on Nov 18, 2021
English summary
India is set not to Participate in Pakistan Champions trophy 2025 due to security concerns. Sports Minister Confirms Govt Has to decide about India Participation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X