For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி ரிலீஸ் செய்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் லிஸ்ட்..! இந்தியாவோட நிலைமை இப்போ இதுதான்..!!

Recommended Video

Watch Video : India won their 2nd test against west indies

மும்பை: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 120 புள்ளிகளை பெற்று இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30ம் தேதி கிங்ஸ்டனில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா, 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக இளம் வீரர், நம்பிக்கை நாயகன் விஹாரி 111 ரன்கள் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இவங்க இல்லீன்னா எனக்கு அது கிடைச்சிருக்கவே கிடைச்சிருக்காது...!! நான் கேப்டன்னா அது சும்மா..!!இவங்க இல்லீன்னா எனக்கு அது கிடைச்சிருக்கவே கிடைச்சிருக்காது...!! நான் கேப்டன்னா அது சும்மா..!!

168 ரன்களுடன் டிக்ளேர்

168 ரன்களுடன் டிக்ளேர்

இதையடுத்து 299 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர் 468 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சை தொடங்கியது. அசாத்திய பந்துவீச்சால் அந்த அணி 210 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

இதன் மூலம் 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. 2 போட்டிகளையும் கைப்பற்றியதால் இந்தியா 120 புள்ளிகள் பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

2வது, 3வது இடம்

2வது, 3வது இடம்

இந்திய அணியை தொடர்ந்து நியூசிலாந்து, இலங்கை அணிகள் 60 புள்ளிகளை பெற்று 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் 32 புள்ளிகளை பெற்று 4 மற்றும் 5வது இடத்தை பிடித்துள்ளது.

பைனல் போட்டி

பைனல் போட்டி

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளின் ஆஷஸ் தொடருடன் ஐசிசி உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது. ஐசிசி உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் பதிப்பு 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் பைனலில் மோதும்.

Story first published: Tuesday, September 3, 2019, 13:09 [IST]
Other articles published on Sep 3, 2019
English summary
India is the no 1 test team in the cricket world, icc releases rank list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X