For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Road Safety World series - இந்தியா லெஜண்ட்ஸ் அணி சாம்பியன்.. ஓஜாவின் அதிரடி சதத்தால் இலங்கை தோல்வி

ராய்ப்பூர் : சாலை பாதுகாப்பு உலக சீரிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தொடர்ந்த 2வது முறையாக வென்று அசத்தி இருக்கிறது.

Recommended Video

RSWS 2022: Champion ஆனது India Legends! SL Legends-ஐ மிரட்டிய Ojha | Aanee's Appeal

சச்சின் தலைமையிலான இந்திய அணி, தில்சான் தலைமையிலான இலங்கை அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டது.

இதில், டாஸ் வென்ற சச்சின் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரராக நமன் ஓஜா, சச்சின் ஆகியோர் களமிறங்கினர்.

சர்பிராஸ் கானை இந்திய அணியில் எப்போது சேர்ப்பீங்க.. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்விசர்பிராஸ் கானை இந்திய அணியில் எப்போது சேர்ப்பீங்க.. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்வி

சச்சின் டக் அவுட்

சச்சின் டக் அவுட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் கோல்டன் டக்காகி குலசேகரா பந்துவீச்சில் வெளியேறினார். இதே போன்று சுரேஷ் ரெய்னாவும் 4 ரன்களில் வெளியேற இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இதனையடுத்து வினய் குமார், நமன் ஓஜா ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். வினய் குமார் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நமன் ஓஜா சதம்

நமன் ஓஜா சதம்

மறுபுறம் அதிரடியாக விளையாடிய நமன் ஓஜா , 71 பந்துகளில் 108 ரன்கள் விளாசினார். இதில் 15 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இறதியில் யுவராஜ் சிங் 19 ரன்களும்,இர்பான் பதான் 11 ரன்களும் எடுக்க, இந்திய லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை தடுமாற்றம்

இலங்கை தடுமாற்றம்

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. முனவீரா 8 ரன்களும், சனத் ஜெயசூர்யா 5 ரன்களும், கேப்டன் தில்சான் 11 ரன்களும், தரங்கா 10 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணி 41 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இந்தியா சாம்பியன்

இந்தியா சாம்பியன்

இறுதியில் ஜீவன் மெண்டிஸ் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க, இஷான் ஜெயரத்னே 22 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். இதனால் இலங்கை அணி 18.5 ஓவர் முடிவில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வினய்குமார் 3 விக்கெட்டுகளும், மிதுன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய லெஜண்ட்ஸ் அணி 2வது முறையாக கோப்பையை வென்றது.

Story first published: Sunday, October 2, 2022, 14:57 [IST]
Other articles published on Oct 2, 2022
English summary
India Legends won the 2 Road safety world series title Road Safety World series - இந்தியா லெஜண்ட்ஸ் அணி சாம்பியன்.. ஓஜாவின் அதிரடி சதத்தால் இலங்கை தோல்வி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X