For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்தடுத்த விக்கெட்டுகள்.. சேப்பாக்கில் எதற்கு செம்மண்? சிக்கலில் பிட்ச் தயாரிப்பாளர்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்தியா நான்கு தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

'என்ன நடக்கிறது சேப்பாக்கில்?' என்று பிசிசிஐ தலைமை அலுவக அறைகளில் இந்நேரம் கேள்விகள் எழத் தொடங்கியிருக்கலாம். காரணம், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் குவித்த பிறகு, இங்கிலாந்து 75-4 என்று தடுமாறிக் கொண்டிருப்பதால்.

ஆம்! ரோஹித், கில், கோலி, ரஹானே விக்கெட்டுகளை இழந்து என்ன செய்வதென்று தெரியாமல் சேப்பாக்கின் பெவிலியன் எண்ட்களை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய அணி நிர்வாகம். அதேசமயம், பிட்ச் தயாரிப்பு குறித்தும் சமூக தளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது.

 பிட்ச் மேக்கிங் கோர்ஸ்

பிட்ச் மேக்கிங் கோர்ஸ்

சென்னையில் நடக்கும் முதல் இரு டெஸ்ட் போட்டிக்கும் பிட்ச் தயாரிக்கும் பொறுப்பு 42 வயதே ஆன கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பிசிசிஐ நடத்திய பிட்ச் மேக்கிங் கோர்ஸ் முடித்திருக்கும் ரமேஷ் உள்ளூர் போட்டிகள் சிலவற்றுக்கும் பிட்ச் தயாரித்து கொடுத்திருக்கிறார்.

 Flat பிட்ச்

Flat பிட்ச்

முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் கூறுகையில், 'மொத்தம் இரண்டு பிட்ச்களை உருவாக்கியுள்ளோம். அதில் முதல் பிட்சில் 'Red Soil' பயன்படுத்தப்பட்டிருக்கும். ரோலர் பயன்படுத்தினால், அது Flat பிட்ச்சாகி விடும்.

 3 அடிக்கு கீழ் களிமண்

3 அடிக்கு கீழ் களிமண்

இரண்டாவது பிட்சிலும் சிகப்பு மண் பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால், 3 அடிக்கு கீழ் களிமண் போடப்பட்டுள்ளது. ஆகையால் இதில் ரோலர் ஓட்டினாலும், ஃபிளாட் ஆகாது என்று கூறியிருந்தார். அதாவது, இந்த பிட்ச் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். தாறுமாறாக பவுன்ஸ் ஆகும்.

 எளிதாக குவிந்த ரன்கள்

எளிதாக குவிந்த ரன்கள்

இந்த போட்டி முதல் பிட்சில் தான் நடந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ரோலர் பயன்படுத்தியதால், இது flat பிட்சாக மாறியது. எனவே, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் சேர்க்க முடிந்தது. ஆனால், இந்த பிட்ச், மூன்றாவது நாளில் பிற்பகுதிக்கு மேல் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்துவிடும்.

 டர்ன் ஆகும் பந்துகள்

டர்ன் ஆகும் பந்துகள்

முன்றாம் நாளான இன்று, பிட்சில் பந்து அற்புதமாக திரும்புகிறது. முதல் நாளில் அஷ்வின் மூச்சைப் போட்டு பந்து வீசியபோது ஒன்று கூட பெரிதாக திரும்பவில்லை. ஆனால், இன்று பந்து பணிவுடன் டர்ன் ஆகிறது. இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு இது சாதமாக அமையும் என்று சொல்வதைவிட, இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக தடுமாறுவார்கள் என்று சொல்லலாம்.

 சரியாக கணிக்கவில்லை

சரியாக கணிக்கவில்லை

ஆனால், இந்திய அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு பிட்ச் மட்டும் காரணமல்ல. ஆர்ச்சரின் அட்டகாசமான லைன் அண்ட் லெந்த் பந்தில் தான் ரோஹித் கேட்ச்சானார். ஷுப்மன் கில் பந்தை சரியாக கணிக்காமல் கேட்ச் ஆனார்.

 அட்டகாசமான கேட்ச்

அட்டகாசமான கேட்ச்

அதேசமயம், டாம் பெஸ் ஆஃப் ஸ்பின்னில் கோலி ஏமாந்தார் என்றே சொல்ல வேண்டும். அவுட்சைட் ஆஃபில் சென்ற பந்தில் இன்சைட் எட்ஜ் ஆகி வெளியேறினார். எப்படி எந்தவொரு காட்சியையும் இந்திய பவுலிங்கில் நாம் காணவில்லை. ரூட்-டின் அட்டகாசமான கேட்ச்சால் ரஹானே வெளியேறினார்.

 இங்கிலீஷ் பிட்ச் ஏன்?

இங்கிலீஷ் பிட்ச் ஏன்?

இந்நிலையில், பிட்ச் இப்போது ஸ்பின்னுக்கு ஆதரவாக திரும்புகிறது. வழக்கமான சேப்பாக் பிட்சை விட்டுவிட்டு, எதற்காக இங்கிலீஷ் கண்டிஷன் கொண்ட செம்மண் டிராக் தயாரிக்கப்பட்டது என்று சமூக தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நான்கு விக்கெட்டுகளை இழந்த இந்தியா இந்த பிட்சை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

Story first published: Sunday, February 7, 2021, 16:46 [IST]
Other articles published on Feb 7, 2021
English summary
india lose wickets first innings ind vs eng 1st test chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X