For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொத்தமா போச்சு.. டாப் ஆர்டர் இப்படியா விளையாடுவது.. ஏமாற்றத்தில் தள்ளிய இந்தியா

மெல்போர்ன்: இந்தியாவின் டாப் ஆர்டர் இப்படி ஏமாற்றும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய வீராங்கனைகள் அனைவருமே சொல்லி வைத்தாற் போல ஏமாற்றி விட்டனர்.

Recommended Video

IND Vs AUS Women T20 World Cup Final - Australia Won India by 85 runs - Aus Lifts The Cup

வரலாறு படைக்கப் போகிறது இந்தியா. அதுவும் மகளிர் தினத்தன்று மிகப் பெரிய பெருமையுடன் வரலாறு படைக்கப் போகிறது என்று இந்தியப் பெண்கள் காத்திருந்த நிலையில் மிகப் பெரிய தோல்வியை பரிசாக கொடுத்து விட்டது இந்தியாவின் மகளிர் டி 20 அணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சீட்டுக்கட்டு போல சரிந்து போய் விட்டது இந்திய அணி. இறுதிப் போட்டி போலவே அவர்கள் விளையாடவில்லை. மாறாக அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வீழ்ந்து 100 ரன்களை கூட எடுக்க முடியாமல் 99 ரன்களில் வீழ்ந்து போனது இந்திய மகளிர் அணி.

 புருஷன்னா இப்படி இருக்கணும்.. கூடவே இருந்து.. தட்டிக் கொடுத்து.. அசத்தல் பரிசளித்த அலிஸா! புருஷன்னா இப்படி இருக்கணும்.. கூடவே இருந்து.. தட்டிக் கொடுத்து.. அசத்தல் பரிசளித்த அலிஸா!

 ஆஸ்திரேலியா ரன் குவிப்பு

ஆஸ்திரேலியா ரன் குவிப்பு

உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து அதிரடியாக ஆடி 184 ரன்களைக் குவித்தது. மிகக் கடினமான இலக்குடன் ஆட ஆரம்பித்த இந்தியாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிதான் காத்திருந்தது. முன்னணி வீராங்கனைகள் அனைவருமே சொதப்பி விட்டனர். குறிப்பாக ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தானியா, ஹர்மன்ப்ரீத் கவுர், வேதா என அனைவருமே சொதப்பி விட்டனர்.

தீப்தி

தீப்தி

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால் மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். எல்லோருமே ஒற்றை இலக்கம்தான். தீப்தி மட்டுமே தாக்குப் பிடித்து 33 ரன்களை எடுத்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் டக் அவுட் ஆகி ஷாக் கொடுத்தார். ஸ்மிருதி 11 ரன்களை மட்டுமே எடுத்தார். பின்னிலை வீராங்கனைகளும் கூட ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

 மோசமான பவுலிங்

மோசமான பவுலிங்

இந்தியா இப்படி மோசமாக ஆடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலியாவை முதலில் அதிக ரன்கள் எடுக்க விட்டதே முதல் தவறு. இந்திய பந்து வீச்சாளர்கள்தான் இந்த நிலைக்கு முக்கியக் காரணம். அவர்களை அதிக ஸ்கோர் எடுக்க விட்டு தங்களது தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர். அடுத்து பேட்டிங்கில் இந்தியா சுதாரிப்பாக ஆடியிருக்க வேண்டும். அதிலும் சொதப்பி விட்டனர்.

 ஷெபாலி வர்மா ஏமாற்றம்

ஷெபாலி வர்மா ஏமாற்றம்

ஷெபாலி வர்மாவை பெரிதாக இந்தியா நம்பியிருந்தது. ஆனால் அவர் இந்தப் போட்டியில் விளையாடிய விதம் ஷாக் தருவதாக இருந்தது. ஜஸ்ட் 2 ரன்களில் வீழ்ந்து வெளியேறினார் ஷெபாலி. அப்போதே தெரிந்து விட்டது இந்தியாவின் மோசமான முடிவு. அடுத்தடுத்து வந்தவர்களும் கூட வந்தோம் போனோம் என்று இருந்தது இன்னும் ஒரு அதிர்ச்சியாகும். மொத்தத்தில் வெற்றியை தாங்களாகவே நழுவ விட்டு விட்டது இந்தியா என்றுதான் சொல்ல வேண்டும்.

Story first published: Sunday, March 8, 2020, 19:03 [IST]
Other articles published on Mar 8, 2020
English summary
ICC Women's T20 World Cup : India Lost by 85 runs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X