For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கிரிக்கெட்னா இந்தியா இல்லாம எப்படி... இந்தியா தான் முக்கியமான நாடு... ஐசிசி தலைவர் சிலிர்ப்பு

டெல்லி : உலக கிரிக்கெட் என்றாலே அதில் இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானது என்று ஐசிசி தலைவர் க்ரெக் பார்க்லே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐசிசி தலைவராக சமீபத்தில் 16 உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட தேர்தலில் க்ரெக் பார்க்லே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியா -பாகிஸ்தான் போட்டிகளை அதிகளவில் பார்க்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இன்னும் வரவில்லை.. சரமாரியாக கேள்வி எழுப்பிய பிசிசிஐ.. ரோஹித் - கோலி வீடியோ கால்.. பேசியது என்ன?ஏன் இன்னும் வரவில்லை.. சரமாரியாக கேள்வி எழுப்பிய பிசிசிஐ.. ரோஹித் - கோலி வீடியோ கால்.. பேசியது என்ன?

க்ரெக் பார்க்லே தேர்வு

க்ரெக் பார்க்லே தேர்வு

சமீபத்தில் நடத்தப்பட்ட ஐசிசி தலைவர் பதவிக்காக போட்டியிட்ட நியூசிலாந்து வழக்கறிஞர் க்ரெக் பார்க்லே அதன் 16 உறுப்பினர்களில் 11 பேர் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இந்தியா, இந்தியா -பாகிஸ்தான் போட்டிகள் மற்றும் உலக டெஸ்ட் கிரிக்கெட் உள்ளிட்டவை குறித்து அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்தியா சிறப்பு

இந்தியா சிறப்பு

உலகளவில் சிறப்பான போர்டாக பிசிசிஐ விளங்குவதாகவும், அதன் முக்கியத்துவத்தை ஐசிசி உணர்ந்துள்ளதாகவும் பார்க்லே குறிப்பிட்டார். பிசிசிஐ மூலம் ஐசிசிக்கு அதிகளவில் வருவாய் வருவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக கிரிக்கெட்டில் இந்தியா மிகச்சிறப்பான பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.

அதிகளவில் பார்க்க விரும்புகிறேன்

அதிகளவில் பார்க்க விரும்புகிறேன்

பிசிசிஐ மற்றும் ஐசிசி இடையில் ஏற்படும் சிறிய மனஸ்தாபங்களை எதிர்கொண்டு இருவரும் நடைபோட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் அதிகமான இந்தியா -பாகிஸ்தான் போட்டிகளை தான் பார்கக விரும்புவதாகவும், ஆனால் அரசியல் சூழ்நிலைகளால் அது தடைபடுவதை தான் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நோக்கத்தை அடையவில்லை

நோக்கத்தை அடையவில்லை

கொரோனா பாதிப்பால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை அது அடையவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் புள்ளிகளை அளிப்பதில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களுடன் தொடர்ந்து இந்த தொடரை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கூறினார்.

Story first published: Tuesday, December 1, 2020, 15:52 [IST]
Other articles published on Dec 1, 2020
English summary
I would like to see a lot of Indo-Pak bilateral cricket -Greg Barclay
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X