For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செமிபைனலில் இந்தியா Vs பாகிஸ்தான் மோதல்…? ஆனா இது எல்லாம் நடக்கணும்.. தலையை சுத்தும் கால்குலேஷன்

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் யாரும் எதிர்பாராத வண்ணம், பரம வைரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதில் ஏற்கனவே ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. எஞ்சிய 2 இடங்களுக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் அரையிறுதியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் சூழல் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே போன்று, இறுதிப் போட்டியிலும் மோதும் வாய்ப்பு உருவாகலாம். அதை சில கணக்கீடுகளுடன் கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்.

13 புள்ளிகள் கிடைக்கும்

13 புள்ளிகள் கிடைக்கும்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசி. வெற்றி பெற்றால் 13 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும். இங்கிலாந்துக்கு 10 புள்ளிகள் கிடைக்கும். பிறகு, பாகிஸ்தான் சந்திக்கும் அடுத்த போட்டியில் வென்றால் 11 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து செமிபைனலுக்கு செல்லும்.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

அதே நேரத்தில் தமது கடைசி போட்டியில் இலங்கையை இந்தியா வீழ்த்தினால் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பெறும். அதே நேரம் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவிடம் தோற்க வேண்டும். அப்போது தான் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் கிடைக்கும்.

தோற்றால் 4வது இடம்

தோற்றால் 4வது இடம்

ஒருவேளை இந்த புள்ளி விவரங்கள் நடக்காமல் போனால்... அதற்கும் ஒரு மாற்று வாய்ப்பு இருக்கிறது. நியூசி.க்கு எதிரான ஆட்டத்தில் வென்றால், இங்கிலாந்து 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதிபெறும். நியூசிலாந்து இப்போதுள்ள 11 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்துக்கு போய்விடும்.

அசர வைக்கும் ரன்ரேட்

அசர வைக்கும் ரன்ரேட்

இதுபோன்ற நிலை உருவானால், பாகிஸ்தான், அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சாய்க்க வேண்டும். இந்த ரன்ரேட்டானது நியூசிலாந்தின் ரன்ரேட்டை விட அதிகமாக இருக்கவேண்டும்.

அரையிறுதியில் மோதும்

அரையிறுதியில் மோதும்

இலங்கையை இந்தியா வென்றால் 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்கும். கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். இந்த 2 வாய்ப்புகளும் நடக்கும் பட்சத்தில் அதாவது ஏதேனும் ஒன்று நடந்தால் கூட போதும்.... அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் அனல் பறக்கும் போட்டிக்கான சூழல் உருவாகும்.

Story first published: Wednesday, July 3, 2019, 20:54 [IST]
Other articles published on Jul 3, 2019
English summary
India may meet pakistan based on the newzeland vs england match result and calculation.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X