For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீனியர்களே தோற்கும் போது ஜூனியர்கள் வெல்வது எப்படி?இந்தியாவின் வெற்றி ரகசியத்தை உடைத்த VVS லட்சுமணன்

ஆண்டிகுவா: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பையை இந்திய அணி வென்றது எப்படி என்பது குறித்து அணியின் மெண்டர் வி.வி.எஸ். லட்சுமணன் விளக்கம் அளித்துள்ளார்.

அண்டர் 19 கிரிக்கெட்டில் இந்திய அணி இதுவரை 8 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் 5 முறை உலக கோப்பையை இந்தியா வென்றுள்ளது.

ஜூனியர் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றி சதவீதம் கிட்டதட்ட 80 ஐ தொட்டுள்ளது. ஆஸ்திரேலியாவால் முடியாததை இந்தியா எப்படி செய்கிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஓட்டுமொத்த கேள்வியே இந்த தலைப்பு தான், சீனியர்களால் முடியாதது எப்படி ஜூனியர்களால் முடிகிறது என்பது தான். இது குறித்து இந்திய ஜூனியர் அணியின் மெண்டராக இருந்த வி.வி.எஸ். லட்சுமணன், இதற்கு காரணம் பி.சி.சி.ஐ.யின் உள் கட்டமைப்பு தான் என்று பதில் அளித்துள்ளார்.

வயதுக்கான போட்டிகள்

வயதுக்கான போட்டிகள்

மற்ற நாடுகள் எல்லாம் சீனியர் கிரிக்கெட்டில் தான் கவனம் செலுத்தும், அவர்களுக்கு மட்டும் தான் போட்டி நடத்தும். ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல 12 வயது, 14 வயது, 16 வயது, 22 வயது, 24 வயது என பல்வேறு பிரிவுகளுக்கும் தேசிய அளவில் கிரிக்கெட் தொடர்களை பி.சி.சி.ஐ. நடத்துகிறது.

சிக்கல்

சிக்கல்

ஜூனியர் அணிகளை தேர்வு செய்வதற்காகவும், அவர்களது ஆட்டங்களை கண்காணிப்பதற்காகவும் தனி தேர்வுக்குழுவினரையும் பி.சி.சி.ஐ. அமைத்துள்ளது. இதனால் தான் அண்டர் 19 இல் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர் என்று வி.வி.எஸ். லட்சுமணன் கூறினார். ஆனால் இம்முறை கோவிட் பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த போட்டியும் நடைபெற வில்லை. இதனால் அணியை தேர்வு செய்வதில் மிகவும் சிக்கலாக இருந்தது.

Recommended Video

IPL 2022 Auction: RCB SWOT Analysis | Aanee Cricket | OneIndia Tamil
ஆரம்பம் தான்

ஆரம்பம் தான்

தேர்வுக்குழுவினர்களும் புதிய நபர்கள், இதனால் அவர்களுக்கு நேரமே இல்லை. இரப்பினும் வெறும் 3 மாதத்தில் அணியை உருவாக்கி, உலககோப்பைக்கு தயாராகும் விதமாக ஆசிய கோப்பை, முத்தரப்பு தொடர் என பல போட்டிகளை பி.சி.சி.ஐ. நடத்தியது. இதனால் தான் இந்த அணி உருவானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், நாட்டுக்காக விளையாடுவதை பெரிதாக நினைத்து வீரர்கள் தடையை உடைத்தனர். இது வெறும் ஆரம்பம் தான். இந்திய அணியில் இவர்கள் இடம்பெறுவது தான் அவர்களது இலக்கு என்று லட்சுமணன் கூறினார்.

Story first published: Sunday, February 6, 2022, 7:10 [IST]
Other articles published on Feb 6, 2022
English summary
India Mentor VVS Laxman reveals the india success in U-19 Cricket சீனியர்களே தோற்கும் போது ஜூனியர்கள் வெல்வது எப்படி? இந்தியாவின் வெற்றி ரகசியத்தை உடைத்த VVS லட்சுமணன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X