For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீனியர்கள் ரெஸ்ட் ஏன்? நாட்டை விட ஐபிஎல்தான் முக்கியமா? உலக சாதனையை நழுவ விட்ட இந்தியா!

டெல்லி: சர்வதேச டி20 போட்டியில் தொடர்ந்து 13 போட்டியில் வென்று உலக சாதனை படைக்கும் வாய்ப்பை இந்திய அணி வீணடித்தது.

இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித், விராட் கோலி, சூர்யகுமார், பும்ரா, ஜடேஜா, ராகுல் இல்லாததது தான்.

இதில் சூர்யா, ஜடேஜா, ராகுல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற 3 பேருக்கும் பிசிசிஐ ஓய்வு வழங்கியது.

 சீனியர் வீரரே இப்படி செய்யலாமா.. முதல் டி20 போட்டியில் நடந்த பெரும் தவறு.. இதை கவனித்தீர்களா?? சீனியர் வீரரே இப்படி செய்யலாமா.. முதல் டி20 போட்டியில் நடந்த பெரும் தவறு.. இதை கவனித்தீர்களா??

கண்டுகொள்ளாத பிசிசிஐ

கண்டுகொள்ளாத பிசிசிஐ

ஐபிஎல் போட்டியின் போதே மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது என்ற சூழல் வந்த போது ரோகித் சர்மாவுக்கும், பும்ராவுக்கும் ஓய்வு வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உப்புக்கு சப்பில்லாத போட்டியில் இருவரும் பங்கேற்றனர். அப்போதே , இவ்விரு வீரர்களுக்கும் தென்னாப்பிரிக்க தொடரில் ஓய்வு வழங்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

தென்னாப்பிரிக்கா பலமான அணி

தென்னாப்பிரிக்கா பலமான அணி

ஆனால் மறு பக்கம் தென்னாப்பிரிக்காவை பொறுத்த வரை, ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அனைத்து வீரர்களையும் உள்ளடக்கிய பலமான அணியை தேர்வு செய்தது. டேவிட் மில்லர், ரபாடா, நோக்கியா ஆகியோருக்கும் ஓய்வு தேவை தானே? ஆனால் அவர்களுக்கு பணமும் முக்கியம், நாடும் முக்கியம் என்பதால், இரண்டு தொடரிலும் பங்கேற்றனர்.

நாடு தான் முக்கியம்

நாடு தான் முக்கியம்

ஆனால் நம்மவர்கள் பணம் தான் முக்கியம் என்ற நோக்கில் ஐபிஎல் தொடருக்காக இந்திய அணியை தியாகம் செய்துவிட்டனர். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வயது 39 ஆகிறது. ஆனால், இதுவரை அவர் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடியது இல்லை. ஐபிஎல் தொடரில் விளையாடினால், உடல் தகுதி பாதிக்கும், சொந்த நாட்டுக்காக விளையாட முடியாது என்ற ஒரே காரணம் தான்.

வீணான உலக சாதனை வாய்ப்பு

வீணான உலக சாதனை வாய்ப்பு

அதன் பலனாக இன்று அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். அதே போல் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் ஆகியோர் நாட்டுக்காக இந்த சீசன் ஐபிஎல் போட்டியை புறக்கணித்தனர். ஆனால் நம் இந்திய அணி வீரர்கள் உலக சாதனையை படைக்க வாய்ப்பு இருந்தும், பணத்திற்காக வாய்ப்பை வீணடித்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓய்வு முக்கியம் தான், அதற்கு முதல் 2 போட்டியில் விளையாட வைத்துவிட்டு, பிறகு ஓய்வு கொடுத்திருக்கலாம். என்ன செய்வது விதி வலியது.

Story first published: Friday, June 10, 2022, 13:09 [IST]
Other articles published on Jun 10, 2022
English summary
India missed the golden chance of creating new record by resting seniors நாடா? இல்லை ஐபிஎல் தொடரா? உலக சாதனையை பறிகொடுத்த இந்தியா.. சீனியர்களுக்கு காசு தான் முக்கியமா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X