For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாக பாதுகாக்கிறாரா ரோகித் சர்மா? உண்மை என்ன..?

ராஞ்சி; இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டராக விளங்கி வந்தவர் ஹர்திக் பாண்டியா.. கபில் தேவ்க்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த குறிஞ்சி மலர் ஹர்திக் பாண்டியா என கிரிக்கெட் விமர்சகர்கள் போற்றி வந்தனர்.

Recommended Video

Hardik Pandyaவை வளைத்த Customs? Mumbai Airportடில் என்ன நடந்தது? | OneIndia Tamil

டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி என இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக ஹர்திக் பாண்டியா இருந்தார்

பேட்டிங்கில் தனி ஆளாக நின்று ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர். பந்துவீச்சிலும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த கூடியவர்

டிவில்லியர்ஸ் ஓய்வை கலாய்த்த இந்திய பவுலர்.. கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்.. வெடித்த புதிய சர்ச்சை!டிவில்லியர்ஸ் ஓய்வை கலாய்த்த இந்திய பவுலர்.. கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்.. வெடித்த புதிய சர்ச்சை!

காயம்

காயம்

இப்படி அதிரடி ஆல் ரவுண்டராக சுற்றி திரிந்த ஹர்திக் பாண்டியா மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. தற்போது கஜினி சூர்யா போல் தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதையே மறந்து விட்டார் ஹர்திக் பாண்டியா. காயம் காரணமாக கடந்த 2 ஐ.பி.எல். சீசன்களில் பாண்டியா சரிவர பந்துவீசுவதில்லை. அப்படி வீசினாலும், அவரது பந்துவீச்சு எடுப்படுவதில்லை

செல்லப் பிள்ளை

செல்லப் பிள்ளை

மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப் பிள்ளையாக இருந்த ஹர்திக் பாண்டியா, பந்துவீச முடியவில்லை என்றாலும் தொடர்ந்து அந்த அணியில் நீடித்து வந்தார். ஆனால் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டராக தான் தேவை. இதனால் டி-20 உலகக் கோப்பை போட்டியில் பலரது எதிர்ப்பையும் மீறி அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா முக்கிய போட்டிகளில் பந்துவீசவில்லை. பேட்டிங்கிலும் பழைய அதிரடி தெரியவில்லை.

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

இனி ஹர்திக் பாண்டியாவை நம்ப தேவையில்லை என்ற முடிவு எடுத்த தேர்வுக் குழுவினர், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்கினர். அவருக்கு பதிலாக ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளங்கிய தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டார். இதனால் ஹர்திக் பாண்டியாவின் இடம் கேள்விக்குறியானது

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இந்த நிலையில் தான் கேப்டன் ரோகித் சர்மா மீது சந்தேகம் வருகிறது. ஏனென்றால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெங்கடேஷ் ஐயருக்கு பந்துவீச ரோகித் சர்மா வாய்ப்பே தரவில்லை. வெங்கடேஷ் ஐயர் தன்னை ஒரு ஆல் ரவுண்டராக நிரூபித்துவிட்டால், ஹர்திக் பாண்டியா அணிக்குள் வர மாட்டார் என்பதால் ரோகித் சர்மா பிளான் செய்து காயை நகர்த்துகிறாரா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Story first published: Saturday, November 20, 2021, 15:32 [IST]
Other articles published on Nov 20, 2021
English summary
India New T20 captain Rohit sharma safeguarding Hardik Pandya.Rohit sharma didn’t give chance to venkatesh iyer to bowl
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X