நியூசிலாந்திற்கு எதிரான இந்தியா ஏ அணி - பிரித்வி ஷா, ஹர்திக் பாண்டியா இடம்பிடிப்பு

டெல்லி : நியூசிலாந்திற்கு எதிரான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இளம் வீரர் பிரித்வி ஷா இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் ரஞ்சி கோப்பையில் பரோடா அணிக்கு எதிராக இவர் குவித்த இரட்டை சதம் இவருக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளது.

நியூசிலாந்திற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 நான்கு நாள் போட்டிகளில் போட்டிகளில் பிரித்வி ஷா இடம்பெற்றுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா, ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளார்.

இந்தியா ஏ அணியின் ஒருநாள் போட்டிகளுக்கு ஷூப்மன் கில் கேப்டனாகவும் 4 நாள் போட்டிகளுக்கு ஹனுமா விஹாரி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏ அணி அறிவிப்பு

இந்தியா ஏ அணி அறிவிப்பு

நியூசிலாந்தில் வரும் பிப்ரவரி மாதம் இந்தியா அணி மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்திற்கான ஏ அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஒருநாள் போட்டிகள், 2 நான்கு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

2 டெஸ்ட் போட்டிகள்

2 டெஸ்ட் போட்டிகள்

நியூசிலாந்தின் வெல்லிங்டனில் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி இந்தியா -நியூசிலாந்து மோதவுள்ள டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இதன் இரண்டாவது போட்டி பிப்ரவரி 29ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது.

ரஞ்சியில் சாதித்த இளம்வீரர்

ரஞ்சியில் சாதித்த இளம்வீரர்

ரஞ்சி கோப்பையில் பரோடோவிற்கு எதிரான மும்பை அணியில் இடம்பெற்றிருந்த பிரித்வி ஷா, அதில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்திருந்தார். இந்நிலையில், நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் அவர் ஒருநாள் மற்றும் 4 நாள் போட்டிகளில் இடம்பிடித்துள்ளார்.

ரிசர்வ் துவக்க வீரராக பிரித்வி

ரிசர்வ் துவக்க வீரராக பிரித்வி

இந்த அணியில் டெஸ்ட் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் மயங்க் அகர்வால் உள்ள நிலையில், பிரித்வி ஷா ரிசர்வ் துவக்க வீரராக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

எம்எஸ்கே பிரசாத் உறுதி

எம்எஸ்கே பிரசாத் உறுதி

இந்த தொடரில் இளம் வீரர் பிரித்வி ஷாவிற்கு விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்று தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

4 நாள் போட்டிகளுக்கு ஹனுமா விஹாரி கேப்டன்

4 நாள் போட்டிகளுக்கு ஹனுமா விஹாரி கேப்டன்

இந்தியா ஏ அணியின் ஒருநாள் போட்டிகளுக்கு ஷூப்மன் கில் கேப்டனாகவும் 4 நாள் போட்டிகளுக்கு ஹனுமா விஹாரி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சேர்ப்பு

மீண்டும் சேர்ப்பு

காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த ஹர்திக் பாண்டியா இந்த தொடரின் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வகையில் அணியில் இடம்பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் விளையாட்டு

நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், அஜிங்யா ரஹானே மற்றும் மயங்க் அகர்வால் உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Prithvi Shah, Hardik Pandya named in India A Squad against Newzealand
Story first published: Tuesday, December 24, 2019, 13:04 [IST]
Other articles published on Dec 24, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X